Show all

மக்கள் தொகையில்! அடுத்த ஆண்டில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐக்கிய நாடுகள் அவை தகவல்

நடப்பு அண்டில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட உலக மக்கள் தொகை அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம். சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சம். அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் தரவுகள் மூலம் தெரியவருகிறது.

30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: உலக மக்கள் தொகை எண்ணிக்கை நேற்று 800 கோடியை எட்டியது. இதில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

உலக மக்கள் தொகை எண்ணிக்கை நேற்று 800 கோடி எட்டியது. இதை முன்னிட்டு ஐ.நா மக்கள் தொகை நிதி அமைப்பு சிறப்பு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடி அளவை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த பதினைந்து  ஆண்டுகளுக்குள் 900 கோடியாக உயரும். இவர்களில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மக்கள் அதிகளவில் இருப்பர். ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். கடந்த 12 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் 100 கோடி பேர் இணைந்துள்ளனர். அடுத்த 100 கோடி பேர் இணையும் போது அதில் சீனாவின் பங்களிப்பும் குறைவாக இருக்கும். உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரித்ததில் அதிக பங்களிப்புள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அதே நேரத்தில் உலகின் அதிக மக்கள் தொகையுள்ள நாடான சீனாவில் இருந்து 7 கோடியே 30 லட்சம் பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.

உலக மக்கள் தொகை 900 கோடியை எட்டும்போது, சீனாவின் பங்களிப்பு எதிர்மறையாக இருக்கும். உலக மக்கள் தொகையில் அடுத்த 100 கோடி பேர் இணைய 14.5 ஆண்டுகள் ஆகும். இது உலகளாவிய வளர்ச்சி மந்தமாக உள்ளதை காட்டுகிறது.

உலகமக்கள் தொகை 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரித்ததில் 70விழுக்காடு மக்கள், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய்பிரிவு நாடுகளில் இருந்து இணைந்துள்ளனர். 900 கோடியை எட்டும்போது, இந்தப் பிரிவினரின் பங்களிப்பு 90விழுக்காடாக இருக்கும்.

அடுத்த இருபத்தெட்டு ஆண்டுகளில், 65 அகவைக்குக்  கீழ்உள்ளவர்களின் எண்ணிக்கை, குறைந்த வருவாய் மற்றும் நடுத்தரவருவாய் பிரிவினர் உள்ள நாடுகளில் அதிகரிக்கும். அதிக வருவாய்உள்ள நாடுகளில் 65 அகவைக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

நடப்பு அண்டில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட உலக மக்கள் தொகை அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம். சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சம். அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் தரவுகள் மூலம் தெரியவருகிறது.

அடுத்த இருபத்தெட்டு ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியே 80 லட்சமாக இருக்கும். இந்திய மக்கள் தொகையில் தற்போது 15 அகவை முதல் 64 அகவைக்கு உட்பட்டவர்கள் 68 விழுக்காட்டு பேர்கள் உள்ளனர். 65 அகவைக்கு மேற்பட்டவர்கள் 7 விழுக்காட்டு பேர்கள் உள்ளனர்.

கடந்த எழுபது ஆண்டுகளில் உலக மக்கள் தொகையின் வளர்ச்சிவிழுக்காடு குறைவாக உள்ளது. அடுத்தாண்டின் தொடக்கத்திலேயே சீன மக்கள் தொகை இறங்குமுகமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,434.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.