Show all

நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா! கருத்துக் கணிப்பு முன்னெடுப்பு

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் கீச்சுவில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார். நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா என்பதே அந்தக் கருத்துக் கணிப்பு.

22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கீச்சுவில் அதிக பங்குகளை வைத்திருப்பவர் எலான் மஸ்க்தான் என்பதால், கருத்துகணிப்பு மூலம் அவர் வைக்கும் கோரிக்கைக்கு கீச்சு நிறுவனம் செவிசாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் கீச்சுவில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார்.

அதில் திருத்தும் அமைப்பு இடம்பெற்ற வேண்டுமா என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு 74.4 விழுக்காட்டு பேர்கள் திருத்தும் அமைப்பு இடம்பெற்ற வேண்டும் என்றும், 25.6 விழுக்காட்டு பேர்கள் வேண்டாம் என்றும் வாக்களித்திருந்தனர்.

இந்த கருத்துக்கணிப்பை பகிர்ந்த கீச்சுவின் தலைவர் பராக் அகர்வால் இந்த கருத்துகணிப்புக்கு கவனமாக வாக்களியுங்கள். இதன் எதிர்விளைவு மிக முதன்மை என கூறியுள்ளார்.

எலான் மஸ்க் இந்த கருத்துகணிப்புக்கு முன்பு தான் கீச்சுவில் தனக்கு 9.2 விழுக்காட்டு பங்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,700 கோடி ஆகும்.  கீச்சுவில் அதிக பங்குகளை வைத்திருப்பவரும் எலான் மஸ்க்தான் என்பதால், கருத்துகணிப்பு மூலம் அவர் வைக்கும் கோரிக்கைக்கு கீச்சு நிறுவனம் செவிசாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், கீச்சுவில் பதிவிட்ட இடுகையைத் திருத்தும் அமைப்பு வந்தால், சிலர் தனது சொந்த விளம்பரத்திற்காக ஒரு கீச்சை பதிவிட்டு அது அதிக கவனத்தை பெற்றவுடன் வேண்டுமென்றே கருத்தை மாற்றி எழுதிக் கொள்ளும் ஆபத்து  இருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வளவு பெரிய விவாதம் தேவையில்லை என்பதற்கு முகநூல் எடுத்துக்காட்டாய் அமைகிறது. முகநூலில் நாம் பதிவிட்ட இடுகையை எப்போது வேண்டுமானலும் திருத்தி வெளியிட முடியும். அப்படியாக இடுகையைத் திருத்தும் வாய்ப்;பை முகநூல் தொடக்கத்தில் இருந்தே வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய செய்தியாகும். 

அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியச் செயலியான கூவில் கூட இந்த வகையான இடுகையைத் திருத்தும் வாய்ப்;பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,209.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.