Show all

கோத்தபய ராஜபக்சே தெனாவெட்டு! யாரும் எங்கள் நாட்டில் முதலீடு செய்யலாம்! இந்தியா முதலீடு தரவில்லை என்றால், சீனா.

இலங்கையில் இந்தியா முதலீடு செய்யவில்லை என்றால், நாங்கள் சீனாவின் உதவியை நாடத் தயாராக இருக்கிறோம்; சீனா முதலீடு செய்யும். என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அண்ணன் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது, சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகம் ஆனது. இது இந்தியாவை பெரிய அளவில் பாதித்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்போது தம்பியும் அதேபோல் சீனாவின் உதவியை நாட இருப்பதாகத் தெரியவருகிறது. அவர் தனது பேட்டியில், இந்தியா ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற ஆசிய நாடுகள் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் . அவர்கள் எப்போது எங்கள் நாட்டில் முதலீடு செய்தாலும் ஏற்றுக்கொள்வோம். எங்கள் நாட்டை முன்னேற்ற அவர்கள் உதவ வேண்டும். முதலீடுகள் மூலமே எங்கள் பொருளாதார நெருக்கடியை நாங்கள் சமாளிக்க முடியும். எங்களுக்கு மட்டும் இல்லை ஆசியாவில் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.

சீன அரசு பல நாடுகளில் முதலீடு செய்து வருகிறது. இந்தியா எங்கள் மீது முதலீடு செய்யவில்லை என்றால் சீனா முதலீடு செய்யும். சீனாவின் உதவிகளை எப்போதும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் பல திட்டங்களை கொண்டு வர போகிறோம் எங்களுக்கும், சீனாவிற்கும் இருக்கும் உறவு குறித்து பலர் சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமே சீனாவுடன் உறவு வைத்துள்ளோம், என்று கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சீனாவுடன் மீண்டும் இலங்கை நெருக்கமாக போகிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக சீனாவை வைத்து கோத்தபய ராஜபக்சே நாடகம் ஆடுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,354.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.