Show all

தொடர்ந்து விலையுயர்ந்து வரும் தங்கம்!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனையானது. இதனால், தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: பன்னாட்டு பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாவது வழக்;கம். எனினும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. 

சென்னையில் நகையணி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,130-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.41,040-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,256-க்குவிற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து, நகை வணிகர்கள் கூறுகையில், ''உலகம் முழுவதும் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதி முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம்'' என்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,480.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.