Show all

800 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த இளம் இந்திய இணையர்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூயார்க் மாநிலத்துக்கு உட்பட்ட சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய விஷ்ணு விஸ்வநாதனும் அவரது மனைவியும் பிரபல சுற்றுலாத்தலங்களை கண்டு களிப்பதில் ஆர்வம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

இதுபோன்ற ஆர்வம் கொண்ட மேலும் பலருக்கு அழகிய சுற்றுலாத்தலங்களை அறிமுகம் செய்துவைக்கும் நோக்கத்தில்  வலைப்பூ தளம் ஒன்றை இணையதளத்தில் நடத்தி வந்துள்ளனர்.

தாங்கள் இணை பறவைகளாக சுற்றித்திரிந்த இடங்களில் எடுத்த புகைப்படங்களையும் அந்த இடங்களைப் பற்றிய அரிய தகவல்களையும் அந்த வலைப்பூ தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

கலிபோர்னியா மாநிலத்தில் யோசேமைட் தேசிய பூங்காவை சுற்றிப்பார்க்க அண்மையில் சென்ற இந்த இணையரின் உடல்கள், அங்குள்ள சுமார் 800 அடி பள்ளத்தாக்கில், கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அசம்பாவிதம் எப்படி நேர்ந்தது? என்று விசாரித்து வருவதாக அந்த பூங்காவின் செய்தி தொடர்பாளர் ஜேனி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். வழுக்கலான மலைப்பகுதியில் அமைந்துள்ள இதே பூங்காவை சுற்றிப் பார்க்க வந்த பத்துபேர் இந்த ஆண்டில் தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், விஷ்ணு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி மூர்த்தி இளம் இணையர் தற்போது 800 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நடுவே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.