Show all

யூடியூப் கேமிங் செயலி நிறுத்தம்! கூகுள் திடீர் முடிவு

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணைய விளையாட்டு ஆர்வலர்களுக்காக  யூடியூப் கேமிங் என்ற பெயரில் தனிச் செயலியை உருவாக்கி வெளியிட்டது கூகுள்.

இதனை அடுத்த ஆண்டில் முற்றிலுமாக நிறுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலாக, இந்த தனித்துவ விiளாட்டுக் காணொளி வசதியை வலையொளியில் ஒரு பகுதியாக கூகுள் வழங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இணையத்தில் விளையாட்டுகளை பார்ப்பதற்கென்று ஒரு பெருங் கூட்டம் இருக்கும். விளையாட்டை நேரலை செய்து விளையாடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும், அதை பார்த்து ரசித்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் வலையொளியில் அதிகம்.

இது தொடர்பான அறிவிப்பு வலையொளி வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுக் காணொளிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அன்றாடம் இருபது கோடியைத் தாண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.