Show all

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: சமனில் முடிந்தது டோனி தலைமையிலான 200 வது போட்டி

பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில், நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால், இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவான், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் டோனி இப்போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். இது அவர் கேப்டனாக பணியாற்றிய 200–வது ஆட்டம் ஆகும். அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த சாதனையாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (230 ஆட்டம்), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் (218) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் டோனி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.  இதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது சேஷாத் 16 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 124 ரன்களும், முகமது நபி 56 பந்துகளில் 64 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும்,  குலதீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, தீபக் சாகர் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

இதையடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் அம்பதி ராயுடு 57 ரன்களும், ராகுல் 60 ரன்களும் குவித்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், பின்னல் வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் (44 ரன்) தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே குவித்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதன்மூலம், ஆட்டம் சமனில் முடிந்தது. கடைசி நேரத்தில் ஜடேஜா 25 ரன்கள் குவித்தும் குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அப்தாப் ஆலம், நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.