Show all

உச்ச பட்ச தலைப்பாகியிருப்பது இங்கிலாந்து இளவரசரோடு சமோசாவும்தான்.

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இங்கிலாந்தின் லண்டன் நகரில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு அறக்கட்டளை நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரி மனைவியை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். அவர்களுடன் இளவரசியின் தாயாரும் உடன் சென்றிருக்கிறார்கள். அப்போது விழாவில் உணவு பரிமாறப்பட்டது. இளவரசர் குடும்பம் என்பதால் விருந்து எப்போதுமே சிறப்புதானே! 

ஆனாலும், அந்த உணவு வகைகளில் ஒன்றே ஒன்றின் மீது மட்டும் இளவரசரின் கண் அலைபாய்ந்தது. அதுதான் சமோசா. சமோசாவை ஒன்றொன்றாக எடுத்து சாப்பிட்டார் ஹாரி. ஆனால் ரொம்ப சாப்பிட்டால் மனைவி திட்டுவார் என்பதால் அதிகம் சாப்பிட முடியாமல் தடுமாறினார். 

இதனால் இளவரசர் ஹாரி, அப்பறம் சாப்பிடலாம் என்று எண்ணி இளவரசிக்கு தெரியாமல் சமோசாவை ஒரு தட்டில் வைத்து மறைத்து கொண்டு, ஓர் அசட்டு சிரிப்பு சிரித்தவாறே செல்லும் காட்சியை ஒருவர் செல்பேசியில் படம்பிடித்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட்டார். இவை தற்போது தீயாகப் பரவி வருகிறது. 

மனைவிக்குப் பயந்த மாதிரி இளவரசர் சமோசாவை மறைத்து வைத்துக் கொள்ளும் நகைச்சுவை காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது. லட்சக்கணக்கில் பகிர்வுகளை அள்ளி வருகிறது. இதில் உச்ச பட்ச தலைப்பாகியிருப்பது இளவரசரோடு சமோசாவும்தான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.