Show all

சிக்கலைத் தவிர்க்க ஓடியொளிகிறது பாஜக- எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார் சுப்பரமணியசாமி.

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முஹம்மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாக பேசிய நிலையில் அதற்கு வளைகுடா ஒத்துழைப்பு அவைத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நுபுர் ஷர்மாவின் அந்தக் கருத்தாடல் வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக உருவெடுத்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். இரு தரப்பு மோதலை தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. கலவரம் தொடர்பாக 1,500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 40 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் கீச்சுவில் இந்தியாவைப் புறக்கணிப்போம் என்பதான செய்திகளைத் தலைப்பாக்கி வருகின்றனர் 

முஹம்மது நபி குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு வளைகுடா ஒத்துழைப்பு அவையின் பொது செயலாளர் நயீப் பலாஹ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்து தவறானது. அதை நிராகரிக்க வேண்டும். முஹம்மது நபி பற்றி அவதூறாக பேசியதை கண்டிக்கிறேன். குறிப்பிட்ட மதத்தினரின் தீர்க்கதரிசிகள், மத சின்னங்கள், வழிபாட்டுத் தளங்கள் குறிவைக்கப்படுகின்றன. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வெறுப்பை தூண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

இசுலாமிய வெறுப்பு கருத்தாடல் பாட்டில், கத்தாரிடம் இந்தியா விளக்கம் அளித்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தலைமைஅமைச்சர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இசுலாமிய வெறுப்பு கருத்தாடல் பாட்டில்- கத்தார், குவைத், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இதையடுத்து இந்தியா சார்பாக கத்தார் அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு தொடர்பு இல்லை. இவை கலகத்தை ஏற்படுத்தும் வகையான ஆட்களின் கருத்துக்கள்தான் என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது. 

இந்த நிலையில் இந்தியா கத்தாரிடம் விளக்கம் அளித்ததை பலர் விமர்சித்து வருகின்றனர். ஒரு பாஜக நிர்வாகி பேசிய கருத்துக்காக இந்தியா தலைகுனிய வேண்டுமா? பாஜக நிர்வாகி ஏதாவது பேசுவார், அதற்கு இந்தியாவின் மொத்த வெளியுறவுத்துறையும் பொறுப்பேற்க வேண்டுமா? என்ன நியாயம் இது என்று இணைய ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு நுபுர் சர்மா மீது சட்டப்பாடான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். 

இந்த நிலையில், சிக்கலைத் தவிர்க்க ஓடியொளிகிற தான் அங்கம் வகிக்கும் பாஜக கட்சியை- அந்தக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி தலைமைஅமைச்சர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிற வகையாகப் பார்க்கப்படுகிறது.

அவரின் திறனாய்வில், மோடியின் 8 ஆண்டுகள் ஆட்சியில், பாரத மாதா தலையை அசிங்கத்தில் தொங்க போடும் நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் சீனாவிடம் லடாக்கில் மண்டியிட்டுவிட்டோம், அமெரிக்காவிடம் குவாட் மீட்டிங்கில் பணிந்து விட்டோம். இதனால் பாரத மாதா தலையை அவமானத்தில் தொங்க போடும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

ஆனால் இப்போது கத்தார் என்ற சின்ன நாட்டிடம் இந்தியா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து விட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் சீரழிவு இது என்று சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,271.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.