Show all

இலங்கையைக் காணவிரும்பும் பயணிகளில் இந்தியாவாழ் மக்களே பேரளவினராம்!

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் இந்திய நாட்டின் சுற்றுலா பயணிகள் மட்டும் 108,510 என்று தெரிவிக்கிறது இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம்.

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: நடப்பு ஆண்டில் இலங்கைக்குச் சுற்றுலா பயணிகளாக வருவோரில் முதலிடம் பிடித்த நாடாக இந்தியா விளங்குவதாக இலங்கை சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி 108,510 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 20 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் இவ்வாறு வந்தவர்களில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த 78,827 பேரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 74,713 பேரும் அடங்குவதாகவும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு மாசி, பங்குனி (மார்ச்) மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுள்ளனராம். அவர்களின் எண்ணிக்கை 106,500 ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,465.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.