Show all

முதல் பத்து தொன்மொழிகள்! உலக மொழிகள் வரிசையில்.

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் மொத்தம் 6500 மொழிகள் பேசப்படுகிறது. ஆனாலும் பின்வரும் பத்து மொழிகளே உலகின் மிகப் பழமையான மொழிகள் என்று மொழியியல் வல்லுனர்களால் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த மொழிகளின் பட்டியல் இதோ:

10. அரபு மொழி             காலம்: கிமு 100 

9. ஆர்மேனியன் மொழி        காலம்: கிமு.450

8. சமஸ்கிருத மொழி         காலம்: கிமு 600

7. இலத்தீன் மொழி          காலம் கி.மு 700 

6. அராமிக் மொழி           காலம்: கிமு 900

5. எபிரேய மொழி          காலம்: கிமு.1200

4. சீன மொழி              காலம்: கி.மு 1250

3. கிரேக்க மொழி           காலம்: கிமு.1600

2. எகிப்து மொழி           காலம்: கிமு 3300

1. தமிழ் மொழி            காலம்: கிமு.5000

10.அரபுமொழி. காலம்:கிமு.100 

அரபு மொழி, தமிழ்தொடராண்டு 3002ல் (கிமு.100) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 18கோடியே 30இலட்சம் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது. செமித்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்த அரபி மொழியானது அரபு தீப கற்பத்தின் நடு மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றுள்ளது. பாரம்பரிய அரபி மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ததில் அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது. 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான நபீதான் என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. நபீதான் என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கனக்கு; என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான நெடுங்கனக்கினை ஆய்வு செய்ததில் அந்த எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்றும் அந்த ‘நபீதான நெடுங்கனக்கே கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றது. கி.பி 4 ஆம் நுற்றாண்டு தொட்டு இஸ்லாம் அரபு தீப கற்பத்தில் உதயமாகும் வரையான காலப்பகுதியில் பாரம்பரிய அரபு மொழியானது ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக காணப்படவில்லை. அரபு மொழி என்பது கி.பி. ஆறாம் நுற்றாண்டுகளின் தொடக்கப் பகுதியில் அரேபிய தீப கற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் பேசப்பட்ட ஒரு சிறு பான்மை மொழியாகும்.

இன்று 21 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐநாவின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது. இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.

9.ஆர்மேனியன் மொழி காலம்:கிமு.450

ஆர்மேனியன் மொழி, தமிழ்தொடராண்டு 2650ல் (கிமு.450) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இம்மொழி 67இலட்சம் மக்களால் பேசப்படுகிறது என அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆர்மேனியன் மொழியை ஆர்மேனிய நாட்டின் மலைப்பகுதியில் வாழும் மக்கள் பேசிவந்த மொழியாகக் கருதப்படுகிறது. ஆர்மேனியன் மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் பட்டியலிடப்படுகிறது.

8. சமஸ்கிருதமொழி காலம்:கிமு.600

சமஸ்கிருத மொழி, தமிழ்தொடராண்டு 2502ல் (கிமு.600) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இம்மொழி எட்டு  ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரப்படி, சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 மட்டுமே உள்ளனர். இவர்கள்தான் தங்கள் தாய் மொழி என சமஸ்கிருதத்தை குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் அலுவல் மொழிகளான, எட்டாவது அட்டவணை மொழிகள் 22ல் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். நடு ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய் வழியாக வட நாவலந்தேயத்தில் குடியேறிய  ஆரியர்கள் மொழியே சமஸ்கிருத மொழியாகும். இவர்கள் தங்கள் மொழியை தேவபாஷை என்று பாமரமக்களிடம் இருந்து அன்னியப் படுத்தியதால், சமஸ்கிருத மொழியின் வளர்ச்சி குன்றியதாகக் கருதப்படுகிறது.

7.இலத்தீன்மொழி காலம்:கிமு.700 

இலத்தீன் மொழி, தமிழ்தொடராண்டு 2402ல் (கிமு.700) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இலத்தீன் மொழி முதலில் அறியப்பட்ட வடிவம் பழைய லத்தீன் ஆகும். இது ரோம மன்னராட்சி முதல் மத்திய ரோமன் குடியரசுகாலம் வரை வழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் மூலமும், சில முந்தைய கால நடைமுறை இலத்தீன் இலக்கிய படைப்புகள் மற்றும் பிளாடஸ{ம் டெரன்ஸ{ம் எழுதிய நகைச்சுவைத் தொகுப்புகள் மூலமும் இதன் தொன்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது. இலத்தீன் எழுத்துக்கள் எட்ருஸ்கன் எழுத்துக்களிலிருந்து உருவானவை. இது பூஸ்டாப்டான் எனப்படும் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி எழுதும் முறையில் எழுதப்பட்டு வந்தது. பின்னர், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லும் முறையில் மாற்றப்பட்டது.

ரோம குடியரசின் பிற்பகுதியிலும், பேரரசின் தொடக்க காலங்களிலும், ஒரு புதிய பாரம்பரிய இலத்தீன் மொழி உருவானது. சிறந்த பேச்சாளர்களின் பேருரைகள், உரைஞர்களின் உரைநடைகள், இலக்கியவாதிகளின் பெரும் இலக்கியப் படைப்புகள், கவிஞர்களின் கவிதைகள், வரலாற்றாசிரியர்களின் வரலாற்று ஆய்வறிக்கைகள், எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள், படைப்பாற்றல் மிக்கோரின் நனவு உருவாக்கங்கள் போன்றவை சொல்லாட்சிக் கல்லூரிகளில் கற்றல் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இவை கற்போரிடையே இலக்கண அறிவை வளர்த்தன. கற்போரின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன. இவை முறைசாரா மொழிக் கல்வி அல்லது பயிற்சி நிறுவனங்களாகவும், புணர்கூட்டு கல்விச்சாலைகளாகவும் செயல்பட்டு வந்தன. இவை கல்வி கற்ற பேராசிரியர்களால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியாக நன்கு பராமரிக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்கள் தற்கால இலக்கண வழிமுறைக் கற்றல் பிரிவுகளுக்கு வேர்களாக அமைந்தன.

6.அராமிக்மொழி காலம்:கிமு.900

அராமிக் மொழி, தமிழ்தொடராண்டு 2202ல் (கிமு.950) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

அரபு மற்றும் எபிரேய மொழிகளின் அடித்தளமாக அராமிக் மொழி கருதப்படுகிறது. இன்று இம்மொழி பேச்சு வழக்கத்தில் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். கிழக்கு அரேபியாவில் தோன்றிய மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

5.எபிரேயமொழி காலம்:கிமு.1200

எபிரேய மொழி, தமிழ்தொடராண்டு 1902ல் (கிமு.1200) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எபிரேய மொழியானது கனானிய மொழி இனத்தைச் சேர்ந்தது. கனானிய மொழிகள் யாவும் வடமேற்கு செமிட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆப்ரஹாம் பென்-யூசூபின் கூற்றுப்படி, தமிழ்தொடராண்டு 1900களில் எபிரேயத்தின் மொழிப்பயன்பாடு தழைத்தோங்கி இருந்தது. 

எபிரேய மொழி இஸ்ரேல் நாட்டில் பேசப்படும் உலகின் பழமையான மொழியாகும். மேலும் கிறிஸ்துவ பைபிள் எபிரேய எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை வழக்கத்தில் இருக்கும் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

மொழியியல் அறிஞர்களைப் பொருத்தவரை, பண்டைய அராமிக் மொழியே பெரும்பாலும் வழக்கத்திலிருந்ததாகவும், பாபிலோனிய நாடுகடத்தல் வரையிலும் எபிரேயம் வட்டார மொழியாகவே பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கருதப்படுகிறது.

பழமைச்சின்னமாக பேச்சு வழக்கொழிந்த மொழியாகக் கருதப்பட்ட எபிரேயம் யூத மதத்தின் புனித மொழியாக மதவழிபாட்டில் இன்றளவும் தொடருகிறது. மேலும் 19 ஆம் நூற்றாண்டின் எபிரேய மீட்பு நடவடிக்கைகளால் உயிர்ப்பு பெற்றுள்ளது. நவீன எபிரேயம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய அரசால் பாலஸ்தீனத்தில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்திய விடுதலை காலகட்டத்தில் இஸ்ரேலில் அரபு மொழியுடன் சேர்த்து எபிரேயம் ஆட்சி மொழியாக்கப்பட்டது. எபிரேயம் யூத விவிலியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அதன் மொழி வழக்கிற்கேற்ப வரலாற்றைக்கொண்டுள்ளது.

4.சீனமொழி காலம்:கிமு.1250

சீன மொழி, தமிழ்தொடராண்டு 1852ல் (கிமு.1250) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 130 கோடி மக்கள் சீன மொழியில் பேசுகிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். உலகில் அதிக மக்கள் தொகை வாழும் சீனாவில் பேசப்படுகிற மொழியே சீனமொழியாகும். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீன மொழி தாய் மொழியாகும். சீன மொழியை எளிதில் பேசக்கற்றுக் கொள்ள முடியும் ஆனால் சீன எழுத படிக்க கற்றுகொள்வது மிகவும் கடினமாகும். ஏனென்றால் 50000 எழுத்துக்கள் சீன மொழியில் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

3.கிரேக்கமொழி காலம்: கிமு.1600

கிரேக்க மொழி, தமிழ்தொடராண்டு 1502ல் (கிமு.1600) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிரேக்க தேசம் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் பேசப்படும் மொழி. மேலும் இது துருக்கி மொழியுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது. இம்மொழி சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் மக்கள் தொகையினால் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சர்க்கட்டிஸ் பேசிய மொழி என்கிற பெருமை இந்த மொழிக்கு உண்டு.

2.எகிப்துமொழி காலம்:கிமு.3300

எகிப்து மொழி, தமிழ்தொடராண்டு தொடக்கத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில்  (கிமு.1600) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இன்று எகிப்திய மொழி அதிகளவில் புழக்கத்தில் இல்லாமல் இருந்தாலும் ஒருகாலத்தில் உலகின் சக்திவாய்ந்த மொழியாக கருதப்பட்டது. எகிப்து நாட்டில் இல்லாத வளங்களே கிடையாது என சக்திவாய்ந்த நாடக இருந்தது. எகிப்து நாட்டிற்கு தமிழ் வணிகர்கள் கப்பலில் சென்று, எகிப்து இளவரசி பாலில் ஊறவைத்துக் குளிக்கும் தமிழக முத்துக்களையும், மயில்தோகை, மெல்லிய துணிவகைகள், ஏலம் கிராம்பு போன்ற நறுமண சமையல் பொருட்கள் கொடுத்துவிட்டு தங்கத்தை செலாவணியாக பெற்று வந்தார்களாம் எகிப்து நாட்டின் அறிஞன் தாலமி தமிழர்களால் செல்வம் வாரிச் செல்லப்படுவதாகப் புலம்புவது எகிப்து வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. தமிழர்களும், எகிப்தியர்களும் சமகாலத்திய நாகரிக மாந்தராக விளங்கியதை இரண்டு நாட்டு இலங்கியங்கள் வரலாறுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

1.தமிழ் மொழி

50000 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே தமிழ் மொழி பேசப்பட்டதற்கான ஆதாரங்கள் இன்னும் தமிழ் மண்ணில் புதைந்துள்ளது. எடுத்துக்காட்டாக கீழடி கிராமத்தை முழுமையாக ஆராய்ச்சி செய்தாலே தமிழ் மொழி பற்றிய பல தகவல்களை நம்மால் உலகிற்கு எடுத்து சொல்ல முடியும். 

மேலும் சிந்துவெளி நாகரிகம்- பழந்தமிழர் நாகரிகமே என்று நிறுவுவதற்கு போதிய சான்றுகள் இருந்தும், இந்திய அரசில் வடமாநில மக்களின் ஹிந்தி, ஹிந்துத்துவா ஆதிக்கம் மறைப்பு செய்து கொண்டு வருகிறது.

உலகில் 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகவும் பழமையான மொழி எதுவாக இருக்கக்கூடும் என்று கேட்டால், தமிழ், பாபிலோனிய மொழி, பழங்கால எகிப்து மொழிகள் மட்டுமே போட்டிக் களத்தில் நிற்கின்றன. 

பேராசிரியர் டாலர்மேன்! மொழியின் உண்மையான  தொடக்கம் குறைந்தபட்சம் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பதற்கான சுவடுகள் உள்ளன. மொழியின் தோற்றம் அதைவிடவும் பழமையானதாக இருக்கலாம் என்று பெரும்பாலான மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். உலக மொழியியல் அறிஞர்களின் இந்த கருது கோள் அடிப்படையில் முதன்மைக்கு தகுதி சான்றதாக தமிழ் இயைந்து கொடுக்கவே செய்கிறது. 

உலக மொழிகளில் தங்கள்  மொழியின் படிநிலை அடிப்படையில் தங்கள் மொழிக்கு மூன்று பெயர்களைச் சுட்டி அழைக்கின்ற ஒரே மொழி தமிழ். 1.நாடகத்தமிழ் 2.இசைத்தமிழ் 3.இயற்றமிழ் என தமிழை முத்தமிழ் என்று அழைக்கிறோம். 

நாடகத்தமிழ் காலத்தில் பேச்சு என்பது கிடையவே கிடையாது. முழுக்க முழுக்க உடலசைவு மொழிகள்தாம். இதையும் தமிழ் தன்னுள் பொருத்திக் கொண்டு நாடகத்தமிழ் என்கிறது. இன்றைய திரைப்படமும் நாடகந்தாம் ஆனால் அது இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பிந்தைய நாடகம். 

இசைத்தமிழ் காலத்தில் வாஆஆஆஆ போஓஓஓஓஓ தாஆஆஆஆ என்று எல்லாம் அளபெடைகள்தாம். இன்றைய திரைப்பட இசை. இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பிந்தைய இசை.

மூன்றாவது இயற்றமிழ். இந்த இயற்றமிழுக்கு பின்பு தமிழனுக்கு காலக்கணக்கு வந்துவிடுகின்றது. தமிழனுக்கு சுழல் ஆண்டுக்கணக்கும் உண்டு தொடர்ஆண்டுக் கணக்கும் உண்டு. அந்த வகையில் தமிழ் தொடர் ஆண்டு இது 5121 ஆகும். இந்த 5120 ஆண்டுகளுக்கும் கோள்களின் இருப்பு, பருவகாலம், ஒவ்வொரு ஆண்டும் தொடங்கிய நேரம் என்று பஞ்சாங்கக் கணக்கு தமிழிர்களிடம் இருக்கிறது.

உலகில் தமிழன் மட்டுந்தான் தனது கோளான இந்தப் புவியை உலகம் என்றும், தனது பெருநிலப் பரப்பை நாவலந்தேயம் என்றும், தான் உழுது விளைத்து வாழும் மண்ணை தமிழ்நாடு என்றும் அவனே பெயர் வைத்துக் கொண்டு அவன் வைத்த பெயரிலேயே அந்தப் பகுதிகளை அவன் அழைக்கிறான்.

அந்தப் பெயர்களையே உலகம் முழுவதும் அந்தப் பகுதிகளை அழைக்கப் பயன் படுத்துகிறார்கள்.

தமிழன் உலகம் (உல்- உருண்டையான) என்று வைத்த பெயரிலேயே உல்டு என உலகம் வழங்கி வருகிறது.

தமிழன் நாவலந்தேயம் என்று அழைத்த பெயரிலேயே உலகம் இந்தேயா- இந்தியா என்று அழைத்து வருகிறது.

தமிழன் தன்னுடைய நாட்டை தமிழ்நாடு என்று சொல்ல உலகமும் டமில்நாடு என்றே அழைக்கிறது.

அமெரிக்காவிற்கு அமெரிக்கன் வெஸ்புகி என்பவர் வைத்த பெயர் விளங்குகிறது.

இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா. மத்தியபிரதேசம், உத்தரப் பிரதேசம் என்பனவெல்லாம் அந்த மண்ணின் மக்கள் தங்கள் நிலத்தை அடுத்தவர் அழைத்த பெயரில் புழங்கி வருகிறார்கள்.

உத்தரப் பிரதேசம். மத்தியப் பிரதேசம், வங்காள தேசம் என்பவைகளில் உள்ள நாட்டைக் குறிக்கும் தேசம் என்கிற சொல் தேயம் என்கிற பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழில் இருக்கிற தமிழ்ச்சொல்.

ஹிந்தி மொழிக்கு ஹிந்தி என்று பெயர் வைத்தவர்கள் முகமதியர்கள்.

உலகில் தமிழன் மட்டுமே தனக்குத் தானே பெயரிட்டுக் கொண்டு மற்றவர்களை அந்தப் பெயரில் அழைக்கச் செய்கிற ஆற்றல் பொருந்தியவன்.

உலகில் முதல் உழவனாக முதல் அணைக்கட்டுக்கு (கல்லணை) சொந்தக்காரனாக தமிழன் இருக்கிறான்.

தமிழன் உடை அடையாளமே அவனுடைய பழைமையைப் பறைசாற்றும், தைக்கப்படுதல் என்கிற பிற்கால புழக்கத்ததான உடையாக இல்லாமல் வேட்டி, சேலை, துண்டு, தாவணி, என

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.