Show all

பொன்னியின் செல்வன், இன்றைய மேம்பாடு! ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் படகோட்டியாக (பூங்குழலி) ஐசுவர்யாலட்சுமி

எம்ஜியார் அவர்களின் வாழ்நாளில் நிறைவேற்ற முடியாமலே போன கனவான, பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை படமாக எடுப்பது, மணிரத்னம் அவர்களால் நிறைவேற்றப்பட, படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகிறது. 

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எம்ஜியார் அவர்களின் வாழ்நாளில் நிறைவேற்ற முடியாமலே போன கனவு ஒன்று இருக்குமானால் அது பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை படமாக எடுப்பது என்பதேயாகும். 

பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை படமாக எடுக்கும் முயற்சி தற்போது மணிரத்னம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகிறது. 

பென்னியின் செல்வன் இன்றைய மேம்பாடு, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் படகோட்டியாக (பூங்குழலி வேடத்தில்) ஐசுவர்யாலட்சுமி என்பதாகும்.
 
‘பொன்னியின் செல்வன்’  படத்தில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, பிரபு, விக்ரம்பிரபு, ரகுமான், ஜெயராம், கிஷோர், ஐஸ்வர்யா ராய், திரிசா, ஐசுவர்யாலட்சுமி ஆகியோர் நடிப்பதாக பட நிறுவனம் அதிகாரச் செய்தியாக அறிவித்து உள்ளது.

ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐசுவர்யாராய் நடிப்பதாக கூறப்படுகிறது. சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கிறார்.

ஐசுவர்யாலட்சுமி படகு ஓட்டும் பயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதை வைத்து பூங்குழலி வேடத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் புதினத்தில், படகோட்டும் பெண்ணான பூங்குழலி இராசராசசோழனைக் காப்பாற்றுவார்.

ஐசுவர்யாலட்சுமி படகோட்டும் பயிற்சி எடுப்பதால் அவர் பூங்குழலி வேடத்தில் நடிப்பது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கி உள்ளது. 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,370.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.