Show all

நித்தியானந்தாவின் அடுத்த அதிரடி! கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், 3 மாவட்டத்தினருக்கு முன்னுரிமை

மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். 

07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக கூறும் நித்தியானந்தா அந்நாட்டிற்கான நாணயத்தை நேற்று வெளியிட்டார். இந்த நாணயமானது பொற்காசு என்ற பெயரில் அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, கைலாசா நாட்டில் உணவகம் நடத்த அனுமதி கோரிய மதுரைக்காரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நேரலையில் தோன்றி பேசிய நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். உடம்பில் ஓடும் ரத்தம், உயிரில் இருக்கிற துணிச்சல் இவை எல்லாம், இந்த மூன்று ஊர் மக்கள் போட்ட பிச்சை என்றும் நித்தியானந்தா புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில், கண்காணிப்பு படக்கருவி வைத்து சாமிபார்வை செய்து வருவதாக தெரிவித்த நித்தியானந்தா, கண்காணிப்பு படக்கருவி சைகையை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க இயலாது என்று சிரித்தவாறு கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.