Show all

பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்

அமெரிக்க அரசும், மெரிலாந்து பல்கலையும் இணைந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த புள்ளிவிவரத்தை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன.   2016ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயங்கரவாத தாக்குதல் நடந்த முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

     2015ம் ஆண்டை விட 2016ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

     2016ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளிலேயே அதிக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

     2016ம் ஆண்டில் 106 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

     இவற்றில் ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலேயே 55 விழுக்;காட்டிற்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன.

     பயங்கரவாத தாக்குதல்களால் 75 விழுக்காடு உயிரிழப்புக்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே நடந்துள்ளன.

     2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ல் பயங்கரவாத தாக்குதல்கள் 9 விழுக்;காடும், பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் 13 விழுக்;காடும் குறைந்துள்ளன. தாக்குதல்களும், உயிரிழப்புக்களும் குறைந்த நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும்,

     அதிகரித்துள்ள நாடுகளில் ஈராக், சோமாலியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

     2016ம் ஆண்டில் நடந்த பெரும்பாலான தாக்குதல்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பாலேயே நடத்தப்பட்டுள்ளன. ஆனால் 2015ல் தாலிபன்களாலேயே அதிக தாக்குதல்களால் நடத்தப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.