Show all

தமிழர்களின் பெருமிதம்! தலைவர் பிரபாகரன் அவர்களின் 63-வது பிறந்த நாள் விழா

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகில் தோன்றிய போராளி இயக்கங்களுக்கு மத்தியில் தனித்துவத்துவமானது விடுதலைப் புலிகள் இயக்கம். வேறு எந்த போராளி இயக்கத்திடமும் இல்லாத அளவுக்கு சகல படை பலத்துடன் திகழ்ந்தவர்கள் புலிகள். கடற்படை, விமானப்படை, தற்கொலைப் படை, மகளிர் படை என பலவிதமான படைப் பிரிவுகளுடன் ஒரு ராணுவத்தைப் போன்று செயல்பட்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகள். உலகில் வேறு எந்த அமைப்பிடமும் இப்படிப்பட்ட படை பலம் இருந்ததில்லை.

தமிழ்தொடர்ஆண்டு-5074ல் (1972) தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பை உருவாக்கினார் பிரபாகரன். பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அது. விடுதலைப் புலிகள் வேகமாக வளர ஆரம்பித்தனர். 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5078ல் (05.05.1976) தனது அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) என மாற்றினார் பிரபாகரன்.

தனது இராணுவ பலத்தால் அரசாங்கத்தையே நிலைகுலையச் செய்த பிரபாகரன் இறுதியில், 12 நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை இராணுவத்தினாரால் ஈழ இனப்படுகொலையில் சூட்டு வீழ்த்தப்பட்டார். பல போராட்டங்களுக்கு மத்தியில், தமிழீழ விடுதலைக்காக தன்னை மட்டுமல்லாமது, தன் குடும்பதையும் தன் இனத்தையும் தியாகம் செய்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் தி.க.வினரால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாடி ஒன்றில் திரண்ட பெரியார் தி.க.வினர் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினர்.

அப்போது பிரபாகரனையும் தமிழீழத்தையும் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பிரபாகரன் பிறந்தநாள் விழாவை இந்த முறை நெருக்கடிகள் இல்லாமல் தமிழக கட்சிகள் கொண்டாடுகின்றன. சமூக வலைதளங்கள் முழுக்க பிரபாகரனுக்கு வாழ்த்து மழையோ மழை!

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்படுகின்றன. முந்தைய ஆண்டுகளைப் போல பிரபாகரன் படத்தை போட்டு துண்டு பிரசுரங்கள் வெளியிடவோ, படம் பொறித்த பதாகைகளை வைத்து பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்தவோ இந்த ஆண்டு நெருக்கடி இல்லை.

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த சில தினங்களாக குருதிக் கொடை முகாம்களை நடத்தினர். சென்னை ஆலம்பாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்திலும் இன்று காலை பிரபாகரன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையம் அருகே சென்னை - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டிகேஏ திருமண மாளிகையில் நடைபெறும் விழாவில் சீமான் பேசுகிறார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் நாளை வைகோ தலைமையில் நிகழ்ச்சி இருக்கிறது. இதில் உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன், மல்லை சத்யா, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜி. தேவதாஸ் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

பிரபாகரனின் 63-வது பிறந்த நாளையொட்டி முகநூல், கீச்சு உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பிரபாகரனின் பழைய காணொளிப் பதிவுகளாலும், புகைப்படங்களாலும் நிறைந்து கிடக்கின்றன.

திமுக சார்பில் அதிகாரபூர்வமாக எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் பிரபாகரனைக் கொண்டாடுவதில் முன்னணியில் இருப்பவர்கள் திமுக.வினரே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,618

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.