Show all

கொத்து கொத்தாக ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசின் அடுத்த இலக்கு ஈழமுகமதியர்களா

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கண்டியில் சிங்கள புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கண்டி மாவட்டத்தில் திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 மசூதிகள், 32 வீடுகள், 75 கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ராணுவமும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கண்டி மாவட்டம் தெல்டினியா, பல்லிகலே பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய அதிரடிப்படை காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, கண்டி கலவரம் குறித்து கொழும்பில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, மற்றும் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடி ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், இலங்கையில் அடுத்த 10 நாள்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. திசநாயகே கூறியதாவது:

நாட்டின் சில பகுதிகளில் மூண்ட வன்முறைச் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, 10 நாள்களுக்கு அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று இலங்கை அதிபராலும், அமைச்சரவையாலும் முடிவெடுக்கப்பட்டது. 

கலவரத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆதலால் இனிமேல் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 10 நாள்களுக்குப் பிறகு, நெருக்கடி நிலையை நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து அதிபர் முடிவெடுப்பார் என்றார் அவர்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சிங்களர்களே பெரும்பான்மையாக உள்ளனர். முஸ்லிம்கள் வெறும் 10 விழுக்காடு மட்டுமே உள்ளனர். 

கடந்த ஏழு ஆண்டுக்குப் பிறகு, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இலங்கையில் வன்முறையை பரப்பும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, மறுவாழ்வு ஆகியவற்றை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் இந்நேரத்தில், வன்முறையை பரப்பும் செயலில் ஈடுபட்டிருக்கும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தி, பொய் செய்திகளை பரப்பி, பொது மக்களை அச்சுறுத்துவோருக்கு எதிராகவும், ஊடகங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடங்கிட்டாங்கய்யா! அடுத்த இன அழிப்பு வேலையை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,719

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.