Show all

புகைப்பிடிப்பதால் அதிக உயிரிழப்பு: உலக நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடம்

புகைப்பிடிப்பதால் அதிகம் உயிரிழப்புக்கள் ஏற்படும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடம் வகிக்கின்றது. இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

     உலகளவில் ஏற்படும் உயிரிழப்புக்களில் 10ல் ஒன்று புகைப்பழக்கத்தினால் ஏற்படுகிறது. அதிலும், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்பது உலக நோய் பாதிப்புக்கள் குறித்து தி லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

     இந்தியாவில் மட்டும் 2015 ம் ஆண்டு புகைப்பிடித்தலால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 63.6 விழுக்காட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் 195 நாடுகளில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், இறப்பு மற்றும் மந்தத்தன்மைக்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் புகையிலை கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

     உலகில் 4-ல் ஒருவர் புகைபழக்கத்திற்கு அடிமையாக உள்ளார். இவர்களில் 3-ல் ஒருவர் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.

     அரை நூற்றாண்டுக்கும் மேலாக புகையிலையினால் உண்டாகும் தீங்கு குறித்து தெளிவான சான்றுகள் வழங்கப்பட்ட போதிலும், உலகில் உள்ள ஒன்றில் 4 ஆண்கள் தினசரி புகைப்பிடிப்பதாக மருத்துவர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

 

     முன்கூட்டியே மரணம் நிகழ்வதற்கு புகைப்பிடிப்பது இரண்டாவது பெரிய ஆபத்தான காரணியாக உள்ளது. இந்நிலையில், இதன் தாக்கத்தை குறைக்க புகையிலை புழக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

     இந்தியாவில் தினமும் 5500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்த தெடங்குகிறார்கள். சுமார் 35 விழுக்காட்டுப் பெரியோர்கள் புகையிலையையே ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துகிறார்கள். ஏறக்குறைய 25 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் 15 வயதிற்கு முன்பாகவே புகையிலையை பயன்படுத்த துவங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.