Show all

முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம் செய்கிறது

முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம் செய்கிறது. கடந்த 1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்கலம் அப்போலோ 11 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 3 பேர் பயணம் செய்தனர். அதைதொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பூமியை விட்டு வெளி கோள்களுக்கு விண்கல பயணம் மேற்கொள்ள அமெரிக்க அரசு அனுமதி வழங்க வில்லை. இந்த நிலையில், தற்போது முதன் முறையாக புளோரிடாவில் கேப் கானாவரில் உள்ள ‘மூன் எக்ஸ்பிரஸ் மிஷின்’ என்ற தனியார் நிறுவனம் சந்திரனுக்கு விண்கலம் மூலம் பயணம் மேற்கொள்ள அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இதனை சந்திரன் எக்ஸ்பிரஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். செவ்வாய், எரிகற்களுக்கும் செல்ல அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ‘அடுத்த ஆண்டில் 2017 சந்திரனுக்கு விண்கல பயணம் நடைபெறும்’ என்று பாப் ரிச்சர்ட்ஸ் கூறினார். சமீபத்தில் தான் விண்வெளிக்கு பயணிகளை அழைத்து செல்வதற்கான உரிமத்தை விர்ஜின் கெலட்டிக் நிறுவனம் தற்போது பெற்றது என்பது குறிப்பிட தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.