Show all

பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எடுக்கப் பட்ட முதல் முயற்சிக்கே ஆப்பு

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மலைசாதியினர் ஆகிய பிரிவினரைத் தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் குஜராத் அரசால் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இவ்வாறு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்றும், இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும் என நீதிமன்றம் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. படேல் சமூகத்தினரை சமாதானப்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை குஜராத் அரசு கடந்த மே 1-ஆம் தேதி பிறப்பித்தது. இதில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மலைசாதியினர் ஆகிய பிரிவினர் அல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிரிவினருக்கு மட்டும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருப்போருக்கு கல்வி நிலையங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்தது. குஜராத் அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசரச் சட்டம் முறையானது அல்ல. மேலும், அரசமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் இது அமைந்துள்ளது. எனவே, இந்த அவசரச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.