Show all

எதிரி நாடுகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக ஏவுகணை

எதிரி நாடுகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக ஏவுகணைகளை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் இன்று வடகொரியா பரிசோதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிரிகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக ஏவுகணைகளை அதிபரின் மேற்பார்வையில் பரிசோதித்தது வடகொரியா.

வடகொரிய நாட்டின் இளம்வயது அதிபரான கிம் ஜாங் உன், சமீபகாலமாக அண்டைநாடான தென் கொரியா மற்றும் அதன் ஆதரவு நாடான அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல்வேறு வகையிலான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.

இதுதவிர, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

இதனால் அந்த நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா.

 

இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

இந்தத் தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம்தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை கடந்த மாதம் பரிசோதித்தது.

 

நேற்று (வௌ;ளிக்கிழமை) மேலும் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 12.35 மணியளவில் கண்டம்விட்டு கண்டம் தாவும் அதிநவீன சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 

இந்நிலையில், எதிரி நாடுகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக ஏவுகணைகளை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் இன்று (சனிக்கிழமை) வடகொரியா பரிசோதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இதற்காக ஏவப்பட்ட ‘ஏஏ’ ரக ஏவுகணைகளை எதிரிகளின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த (போலி) விமானங்களை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும், இந்தப் பரிசோதனை தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன் முழுமையான திருப்தி தெரிவித்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.