Show all

5120வது தமிழ்ப் புத்தாண்டுக்கு அமெரிக்கா வாழ்த்து!

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், நேபாளம், சிங்களம், ஆகிய மொழிகளுக்கான புத்தாண்டு வாழ்த்து அமெரிக்க அதிபர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

5120வது தமிழ்ப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டையெட்டி அமைத்துக் கொண்ட சிங்கள புத்தாண்டு, நேபாள புத்தாண்டுகளுக்கு அமெரிக்க குடியரசுத் தலைவர் டிரம்ப் சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் ஜே. சுல்லிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகமெங்கும் 5120வது தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ் மக்களுக்கும், சிங்கள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், நேபாள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அமெரிக்க குடிஅரசுத் தலைவர் டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்' இனிய புத்தாண்டு! வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அமெரிக்க அரசுடனான கூட்டாளித்துவத்தை வளர்க்கட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,757.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.