Show all

வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட கீதா வரும் அக்டோபர்26 இந்தியா திரும்புகிறார்.

சிறுமியாக இருந்தபோது வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட காது கேளாத, வாய் பேச இயலாத கீதா வரும் 26-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, வரும் 26-ம் தேதி கீதா இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார். அவரைப் பாகிஸ்தானில் பாதுகாத்து வந்த எதி அறக்கட்டளையைச் சேர்ந்த 5 பேர் உடன் வருகின்றனர். அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அரசு விருந்தினர்களாக நடத்தப்படுவர் என்றார்.

கீதா 7-8 வயதாக இருக்கும்போது, தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று, லாகூர் ரயில் நிலையத்தில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸில் தனியாக அமர்ந்திருந்தார். அவரை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எதி அறக்கட்டளை கீதாவைப் பாதுகாத்து வளர்த்தது.

இரு நாடுகளின் முயற்சியால் கீதாவின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவுறுத்தலின் பேரில் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் டிசிஏ ராகவன் தனது மனைவியுடன் சென்று கீதாவை கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்தார்.

கீதா இந்தியா வந்ததும், பிஹாரில் உள்ள அவரது பெற்றோராகக் கருதப்படுபவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்து, உறுதி செய்யப்பட்டபின் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்.

.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.