Show all

இந்தப் பத்து காசுகள் பேரறிமுகமாக விளங்குகின்றன! பிட்காசு போலவே குறளிச்செலாவணிச் சந்தையில்

குறளிச்செலாவணி ஆர்வலர்களுக்கான இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே பேரறிமுகமாக விளங்குகின்றன.

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே பேரறிமுகமாக விளங்குகின்றன.

பத்தாண்டுகளுக்கு முன்புதான் உலகின் முதல் குறளிச்செலாவணியான பிட்காசு அறிமுகமானது. அப்போதிருந்து, நூற்றுக்கணக்கான குறளிச்செலாவணிக் காசுகள் குறளிச்செலாவணிச் சந்தையில் நுழைந்தன.

பிட்காசு மிகவும் மதிப்புமிக்க மற்றும் அதிக முதலீடு செய்யப்பட்ட குறளிச்செலாவணியாக இருந்து வருகிறது. அத்துடன் பேரறிமுகமாக விளங்கும் பத்து மாற்றுக்காசுகள் குறித்து இங்கு பேசுவோம்.

எத்தீரம் (ETH)
குறளிச்செலாவணி மாற்றுக்காசுகள் பட்டியலில் எத்தீரம் முதலிடத்தில் இருகிறது என்று சொல்லலாம். உலகில் உள்ள எவரும் தளையின்றி அணுகக்கூடிய நிதித் தயாரிப்புகளின் பரவலாக்கப்பட்ட தொகுப்பை உருவாக்குவதே இந்த குறளிச்செலாவணியின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்தக் காசு எல்லா இடங்களிலிருந்தும் கவனத்தை ஈர்த்தது. எத்தீரம் அனைத்து வணிகப்பயன்பாடுகளுக்கும் எற்றது என்று பேசப்படுகிறது.

கார்டானோ (ADA)
பரவலாக்கப்பட்ட நிதி தயாரிப்புகளை நிறுவுவதன் மூலம் உலகின் சிறந்த நிதி இயக்க முறைமை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கிவரும் கார்டானோ வரும் நாட்களில் எந்த அளவிற்கு வளரும் என்பதை ஒருவர் தெளிவாக மதிப்பிட முடியும். மேலும், இதன் இயங்குதன்மை மற்றும் சட்டப்பாட்டு ஒப்பந்தமும் இந்தக் காசு குறித்து சிறப்பாகப் பேசப்படுகிறது.

சொலானா (SOL)
மற்ற வலைப்பின்னல்களில் இருந்து முறிகளுடன் (டோக்கன்) ஒருங்கிணைக்கும் திறன் காரணமாக, ஆற்றல் கொண்ட குறளிச்செலாவணிகளில் ஒன்றாக சொலானா வெளிப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த குறளிச்செலாவணி அதிக பரிமாற்ற வேகம் மற்றும் குறைவான செயலாக்க சக்தியையும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இந்த குறளிச்செலாவணி எவ்வளவு சிறந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று பேசப்படுகிறது.

லிட்காசு (LTC)
பிட்காசு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்ட லிட்காசு நிறைய வழிகளில் பிட்காசுவைப் போலவே கருதப்படுகிறது. இருப்பினும், அதன் வேகமான சங்கிலிக் கட்டிட வீதம் மற்றும் விரைவான பரிமாற்ற உறுதிப்படுத்தல் நேரம் பிட்காசுவை விட சிறந்த முதலீட்டு விருப்பமாகப் பேசப்படுகிறது.

டோஜ்காசு (DOGE)
டோஜ்காசு சில காலமாக ஊடகங்களில் பேரறிமுகமாக இருக்கிறது. இது பல வழிகளில் பிட்காசு மற்றும் லிட்காசு போன்றது. குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால், இந்தக்காசு தொடங்கப்பட்டதிலிருந்து அதன் மதிப்பு அதிவேக உயர்வை கண்டது என்பது தான். சிறந்த முதலீட்டை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது கதவுகளைத் திறக்கிறதாம். உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா மற்றும் பாசக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலன்மாஸ்க் கூட இந்தக் காசுவில் முதலீடு செய்ததை ஊடகங்கள் தலைப்பாக்குகின்றன.

ரிப்பிள் (XRP)
இயங்கலைக் கொடுப்பனவுகளை (ழடெiநெ pயலஅநவெ pசழஉநளளiபெ) முன்னெப்போதையும் விட சீராகச் செய்யும் திறனுக்காக ரிப்பிள் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கவனத்தைப் பெற்றுள்ளதாகப் பேசப்படுகிறது.

போல்கோடோட் (DOT)
இயங்குதன்மை, அளவிடும் தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை போல்கோடோட் எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததற்கான பல காரணங்களில் சிலவாம். மலிவான மற்றும் வேகமான பரிவர்த்தனைகளில் இது சிறந்த ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

டெதர் (USDT)
டெதர் என்பது அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ போன்ற உறுதியளிக்கப்பட்ட  நாணயங்களால் ஆதரிக்கப்படும் நிலையான மாற்றுக்காசு ஆகும். குறளிச்செலாவணி சந்தை எவ்வளவு நிலையற்றது என்பதைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் அதிக இடர்பாட்டில் சிக்கத் தயாராக இல்லை என்றால் முதலீடு செய்வதற்கு சிறந்த குறளிச்செலாவணி இதுவாகும். 

பினான்ஸ் காசு  (BNB)
உலகின் மிகப்பெரிய குறளிச்செலாவணி பரிமாற்றங்களில் ஒன்றான பினான்ஸ் காசு, அதன் சொந்த நாணயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இது பினான்சின் பரிமாற்ற மேடையில் வணிகத்தை எளிதாக்கும் ஒரு வழிமுறையாக தொடங்கப்பட்டது. ஆனால் இன்று, இது வணிகம், கொடுப்பனவு மற்றும் பயண ஏற்பாடுகளை பதிவு செய்வதற்கான திறனைக் கொண்டுள்ளது. பிட்காசு, எத்தீரம் நாணயங்களுக்கு அடுத்து சிறந்த நாணயமாக இது இருக்கிறது, நல்ல லாபத்தையும் கொடுத்துவருகிறது.

ஸ்டெல்லர் (XLM)
ஸ்டெல்லர் என்பது ஒரு திறந்த கட்டச்சங்கிலி வலைப்பின்னல் ஆகும், இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எந்தவொரு நாணயத்திற்கும் இடையே எல்லை தாண்டிய பரிமாற்றங்களை அனுமதிக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,081.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.