Show all

மொத்த ஆப்கானிஸ்தானத்தையும் தாலிபன்கள் கைப்பற்றிவிட்டார்கள்! வன்முறை மற்றும் ஆயுத போராட்டத்தின் மூலம்

அமெரிக்கா- 60 லட்சம் கோடியை செலவழித்தும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அங்கு நிலவிய கல்வியின்மை முழு முதல் காரணம் என்பது உலகின் பேசுபொருளாகியுள்ளது.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: பெண்கள் உரிமைகள் மிகவும் பாதிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளின் ஆப்கானிசுத்தானும் ஒன்று. கல்வி உரிமை, வேலை செய்ய உரிமை, தன்அதிகாரமாக நடமாடும் உரிமை, தன்னதிகாரமாக உடை உடுத்த உரிமை, மருத்துவ உதவி பெறும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளே ஆப்கானிசுத்தான் பெண்களுக்கு பல காலமாக மறுக்கப்பட்டு இருந்தன. 

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், இங்கு தலிபான் வீழ்ச்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சட்டத்தின் முன் சம உரிமைகளும் பொறுப்புகளும் உண்டு என்று வரையறை செய்யப்பட்டது. ஆனால் நடைமுறைகளில் மாற்றங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. மேலும் வறுமை ஒழிப்பிற்கோ, கல்வி வளர்ச்சிக்கோ அரசு எந்த வித முன்னெடுப்பும் செய்யாதது மீண்டும் தாலிபான்கள் தலை நிமிர்வதற்கு காரணம் அகியது.

இன்று ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கைகளில் சென்றுவிட்டது வன்முறை மற்றும் ஆயுத போராட்டத்தின் மூலம் மொத்த நாட்டையும் தலிபன்கள் கைப்பற்றிவிட்டார்கள். அமெரிக்கா- 60 லட்சம் கோடியை செலவழித்தும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அங்கு நிலவிய கல்வியின்மை முழு முதல் காரணம் என்பது உலகின் பேசுபொருளாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மக்களின் கல்வியறிவுக்கான முன்னெடுப்புகள் எதுவும் செய்யாமல் ஆயுதத்தின் மூலமும், படைத்துறைகள் மூலமும், பணத்தின் மூலமும் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற அமெரிக்கா, கடைசியில் தலிபான்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு பின்வாங்கிவிட்டது. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்த பின்லேடன், அமெரிக்காவின் இரட்டை கோபுத்தை தகர்த்ததால் கோபம் கொண்ட அமெரிக்கா, பின்லேடன் உள்ளிட்ட அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்த தலிபான்களை ஓட ஓட விரட்டி அடித்தது. தன் பொம்மை அரசு ஆட்சி அதிகாரத்தில் தன் சொல் கேட்பவர்களை உட்கார வைத்து மறைமுகமாக அரசை நடத்தியது. ஆனால் அங்கு நிலவிய கல்வியின்மை, வறுமையை சீர் செய்ய அமெரிக்கா பெரியதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பின்லேடனையும், அல்கொய்தாவையும், தலிபான்களையும் தேடிதேடி வேட்டையாடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டியது. 

தாலிபான்களை விரட்டிவிட்டு அமெரிக்கா அமைத்த அரசும், பெரியதாக நிதியுதவி இல்லாமல் சமூக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. மக்கள் வறுமை கொஞ்சம் கூட குறையவில்லை. ஒரு பக்கம் பயங்கரவாதம், மறுபக்கம் வறுமை காரணமாக போதை பொருள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டினார்கள். 

தாலிபன்கள், போதைப்பொருள் விற்பனையில் பெரிய வருவாய் ஈட்டி அமெரிக்காவை அசரவைத்தனர். அத்துடன் வெளிநாடுகளின் மறைமுக உதவி, ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதங்கள் அனுப்புவது போன்றவற்றின் மூலமும் பலமாகினர். தலிபான்களிடம் இருந்த பணம், செல்வாக்கு, படைத்துறை பலம், திறமையான நிர்வாகம் போன்றவை காரணமாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தற்போது ஆயுத போராட்டத்தின் மூலம் வீழ்ததி உள்ளர்கள். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை விரட்ட முடியாமல் அமெரிக்கா கடைசியில் அங்குள்ள அரசை கைவிட்டு விட்டு சென்றுவிட்டது. இதில் இருந்து அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே கற்க வேண்டிய பாடம் கல்வி தான். கல்வியை சரியாக அங்கு கொடுத்திருந்தால் வறுமை ஒழிந்திருக்கும். வறுமை ஒழிந்திருந்தால் தாலிபன்கள் தலை தூக்கியிருந்திருக்க முடியாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.