Show all

இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு! ரணில் விக்கிரம சிங்கே தலைமை அமைச்சராகத் தொடர தடையில்லை

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா புதிய தலைமை அமைச்சராக நியமித்துள்ள ராஜபக்சே பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே தலைமை அமைச்சராக அங்கிகரிக்கப் படுவார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க பதினேழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை. 

ரணில் விக்கிரம சிங்கே தலைமை அமைச்சராகத் தொடர ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு போதுமானது. பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்கிரம சிங்கேவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

ரணில்விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணியில், ராஜபக்சே, குதிரைப் பேரம் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கட்சிதாவல் தடை சட்டம் எல்லாம் இல்லை.  

சிறிசேனா இருபது நாட்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டிருக்கிறார். இருபது நாட்களுக்குப் பிறகு கூடும் பாராளுமன்றத்தில் ராஜபக்சேவை தகுதியிழக்க செய்கிற பொறுப்பு ரணில் விக்கிரம சிங்கே கையில்தான் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.