Show all

முடங்கியுள்ளன! உலகம் முழுவதுமாக- புலனம், முகநூல் மற்றும் படவரி ஆகியன

யார் யாரோ அழைக்கின்றார்களே! என்று பேசியை எடுத்தால், உங்களுக்கு புலனம் வேலை செய்கிறதா? உங்களுக்கு முகநூல் வேலை செய்கிறதா?  மற்றும் உங்களுக்குப் படவரி வேலை செய்கிறதா என்று கேள்விகள்.  ஆம் முடங்கியுள்ளன. உலகம் முழுவதுமாக- புலனம், முகநூல் மற்றும் படவரி ஆகியன

18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகம் முழுவதுமாக புலனம், முகநூல் மற்றும் படவரி ஆகியன முடங்கியுள்ளது, கடந்த அரை மணி நேரமாக உலகின் பேசுபொருளாக மாறியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புலனம், முகநூல் மற்றும் படவரி உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 30 நிமிடத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தச் சிக்கலைச் சரி செய்ய புலனம், முகநூல் மற்றும் படவரி உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில் நுட்பக்குழு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் என கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,026.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.