Show all

சிங்கப்பூர் தமிழ் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்! சிங்கப்பூர் வந்தடைந்த வடகொரிய அதிபர் கிம்மை

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக, வடகொரியா அதிபர் கிம் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருக்கு தமிழரான சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூரில் சந்திக்கிறார்கள். இவர்கள் சந்திப்பிற்காக ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய் அன்று இருவரும் சந்திக்க உள்ளனர். உலக வரலாற்றில் இது முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதில் அணு ஆயுதம் குறித்த தலையாயத்துவ அறிவிப்பு வெளியாக உள்ளது. 

எலியும் பூனையுமாக இருந்த இரண்டு பேரும் நாளை மறுநாள் சந்திக்கிறார்கள். இது உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சந்திப்பின் முடிவில் அணு ஆயுதத்தை கைவிட போவதால் இன்னும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. எல்லா நாடுகளும் இந்த சந்திப்பைதான் எதிர்நோக்கி உள்ளன.

இந்த நிலையில் சிங்கப்பூர் விமான நிலையத்தில், கிம்மிற்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை தமிழரான சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷணன் வரவேற்றார். விவியன் பாலகிருஷ்ணன் தற்போது சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் தந்தை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். 

தற்போது சிங்கப்பூர் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லா விதமான போக்குவரத்து சேவைகளும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. சிங்கப்பூருக்கு உள்ளே வருபவர்களும், வெளியே செல்பவர்களும் கடும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் கிம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் மிகுந்த அச்சம் தெரிவித்ததால், ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் சிங்கப்பூரின் கெபல்லா உணவகத்தில் சந்திக்க உள்ளனர். இந்த கெபல்லா உணவகம் சென்டோஸா தீவில் உள்ளது. ஆனால் நாளை வரை கிம், தீ ரெஜிஸ் உணவகத்தில் தங்க வைக்கப்படுவார். போயிங் 747 விமானத்தில் சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் வந்த கருப்பு நிற பென்ஸ் காருக்கு முன்னும் பின்னும் மூன்று பென்ஸ் கார்கள் பாதுகாப்பிற்கு வந்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,814. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.