Show all

கூகுள் பிளஸ் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியான செய்தி! இன்னும் பத்து மாதத்தில் கூகுள்பிளஸ் சமூக வலைதளம் மூடப் படுகிறது.

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூகுள் தேடுபொறியின் ஓர் அங்கம் 'கூகுள் பிளஸ்' சமூக வலைத்தளம். இது தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் முகநூல் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் தற்போது 'கூகுள் பிளஸ்' சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறும்போது, இந்த தகவல் திருட்டு பற்றி, இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது. இருந்தாலும் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாத நிலையில், கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில் உடனடியாக மூடப்பட்டு விடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பென் ஸ்மித் கூறுகையில், பயன்பாட்டளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும் என்று குறிப்பிட்டார்.
முகநூலை விட தெளிவான வடிவமைப்பு இருந்த போதும் கூட, கூகுள் பிளசால் மக்களை கவர முடியவில்லை. அது ஏனென்பதை கூகுள் ஆய்வு செய்யாமல் மூடும் முடிவுக்கு வந்தது கூகுள் பிளஸ் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியான செய்திதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,936.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.