Show all

அமெரிக்காவில் கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான புயல் காற்று, கொந்தளித்து எழுந்த கடல் அலைகள்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. 

இந்தப் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டதால், புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதையடுத்து 3 மாநிலங்களிலும் உள்ள கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. கொந்தளித்து எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

வடக்கு கரோலினாவில் புயலில் மரம் சாய்ந்து வீட்டின் மேல் விழுந்ததில் தாய், குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். 

இதேபோல், புயல் தாக்கத்தில் சிக்கி மேலும் 2 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

புயல் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,911.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.