Show all

ஏழுநாட்கள் கடைபிடிப்பு! தமிழினப் படுகொலை நினைவுக் கிழமை இன்று முதலாக

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழினப் படுகொலை நினைவு கிழமை இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனை நினைவுகூறும் வகையில் வைகாசி04 (மே 18) தமிழினப் படுகொலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த இனப்படுகொலை நினைவுக் கிழமை இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது. யாழ்ப்பாண வட மாகாணஅவை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி படுகொலை நிகழ்விடத்தில் இன்று தமிழினப் படுகொலை நினைவு கிழமை தொடங்கியது.

அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், குகதாஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.