Show all

அரசபயங்கரவாதி ராஜபக்சேவின் மகனுக்கு அமெரிக்கா செல்ல விமானத்திலேயே ஏற்ற மறுப்பு

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஷ்யாவில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலை பார்வையிட தனிப் பார்வையாளராக இலங்கை முன்னாள் அதிபர் அரசபயங்கரவாதி ராஜபக்சேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே சென்றிருந்தார். தேர்தல் முடிவடைந்ததையடுத்து மாஸ்கோ நகரில் இருந்து அமெரிக்கா செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அதற்காக எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் பயணச்சீட்டு எடுத்துள்ளார். மேலும் அமெரிக்கா செல்வதற்காக நுழைவு அனுமதியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நமல் அமெரிக்கா வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனம் மறுத்துள்ளது. 

இதுகுறித்து நமல் ராஜபக்சேவின் அலுவலகத்தினர் கூறிய போது, நமலை அமெரிக்காவிற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டனர். இது குறித்து மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் நமல் கொழும்புக்கே திரும்ப வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,734.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.