Show all

சாத்தியமா! ராஜபக்சே இலங்கை தலைமை அமைச்சராக நீடிப்பதற்கு பெரும்பான்மையை உறுதி செய்ய வேண்டும்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய இலங்கைக்கான அதிபர் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பாக ராஜ பக்சே இலங்கை அதிபராக போட்டியிடுகிறார்.

அதே ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் மூத்த அமைச்சராக இருந்தவரும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவருமான, மைத்திரிபால சிறிசேனா அதிபராக போட்டியிடுவதால் அந்தக் கட்சியால் விலக்கப் பட்டு, ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்கப் பட்டு, அதிபர் வேட்பாளராக நின்று. அதிபராக வெற்றி பெறுகிறார்.

சில மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி 95 இடங்களைப் பெறுகிறது. மைத்திரிபால சிறிசேனாவுக்கு அதிபராக ஆதரவு அளித்த, ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களைப் பெறுகிறது. 

இங்கேதான் வேடிக்கை தொடங்குகிறது! இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு தலைமை அமைச்சர் பதவி வழங்கப் படுகிறது. ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி அமைக்க வேண்டு மென்றால் இன்னும் ஏழு இடங்கள் தேவைப் படுகிறது.  

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 பேரும், ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 95 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 16 பேரும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 6 பேரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒருவரும் என உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ரணிலுக்குகொடுத்துள்ளது

தலைமை அமைச்சராக நீடிக்கவுள்ளது ராஜபக்சேவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா என்பது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கையில் உள்ளது.

இலங்கையில் நேற்று யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அதிபராக இருக்கிற மைத்திரபால சிறிசேனாவுக்கு- ரணில் விக்கிரம சிங்கவின் கட்சி அதிபர் பதவி வழங்கிய கட்சி. ராஜபக்சேவின் கட்சி, தான் முன்பு பொது செயலாளராக இருந்து அதிபர் தேர்தலில் நின்றமைக்காக தன்னை நீக்கிய கட்சி. 

பெரும்பான்மை பலம் கொண்ட, தன்னை அதிபராக்கிய கட்சியின்  ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு, சிறுபான்மை கட்சியான, தன்னை நீக்கிய கட்சியைச் சேர்ந்த ராஜபக்சேவை தலைமை அமைச்சராக அறிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ராஜபகசேவுக்கு அளித்துள்ளது. இந்த கட்சிக்கு 2 இடங்கள் உள்ளனர். ஈழ மக்களின் குடியரசு கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் டக்ளஸ் தேவானந்தா தனது ஆதரவை ராஜபக்சேவுக்கு அளித்துள்ளார். இந்தக் கட்சியின் உறுப்பினர் பலம் ஒன்று. இந்த நிலையில் அதிக உறுப்பினர்களை கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

பதினாறு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் அரசுக் கட்சியின் முடிவை பொருத்தே இலங்கை தலைமை அமைச்சர் யார் என்பது தெரியவரும். இந்த கட்சி ராஜபக்சேவுக்கு ஆதரவளித்தால் அவர்தான் தலைமை அமைச்சராக இருப்பார். ரணிலுக்கு ஆதரவளித்தால் இவரே தலைமை அமைச்சராகத் தொடர்வார். எனவே இந்த கட்சியின் நிலைப்பாட்டை பொருத்தே இலங்கை அரசியல் நகரும்.

உண்மையில் ரணில் விக்கிரம சிங்கே அப்போதே எதிரிக் கட்சியான ராஜபக்சே கட்சியுடன் கைகோர்க்காமல் தமிழ் அரசுக் கட்சியிடம் ஆதரவு கேட்டிருந்திருக்க வேண்டும். மைத்திரிபால சிறிசேனா துரோகியாவர் என்று தெரியாமல் ஏமாந்து போனார் ரணில் விக்கிரம சிங்கே. அப்போதே இதைச் செய்யாமல் இப்போது தனது ஆதரவு கேட்கும் ரணில் விக்கிரம சிங்கேவை தமிழரசு கட்சி முதுகில் குத்த நினைக்குமானால் ராஜபக்சே தலைமை அமைச்சராவதை தவிர்க்க முடியாது. 

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.