Show all

மக்கள் நிம்மதி! ஊருக்குள் சுற்றித் திரிந்து அச்சப்படுத்தி வந்த அரசநாகம் நேற்று பிடிபட்டது. சில நாட்கள் முயற்சிக்குப் பின்

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம், கல்லார் பகுதியில் கடந்த சில நாட்களாக அரசநாகம் ஒன்று சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் குழுவினரோடு அங்கு வந்த வனத்துறையினர், பல முறை பாம்பை பிடிக்க முயன்றும் அது சிக்கவில்லை. சில நாட்கள் முயற்சிக்குப் பின் அந்த பாம்பு இன்று பிடிபட்டது. 

பின்னர் அந்தப் பாம்பை கோணிப்பையில் அடைத்த வனத்துறையினர், அதை பர்லியாரை அடுத்துள்ள அடர்ந்த மலைக்காட்டினுள் விடுவித்தனர். இதுபோன்ற நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளை பார்த்தால், அவற்றை பிடிக்க முயற்சிக்கக் கூடாது எனவும், உடனடியாக தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,055.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.