Show all

மனிதர்களை தொல்லை செய்யும் பறவைகள் குறித்து காவல்துறையில் புகார். விசாரணையில் கிடைத்த தகவலால் மக்கள்அதிர்ச்சி

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியைச் சேர்ந்த கில்பெர்ட் பகுதியில் பறவைகள் திடீர் என்று மக்களை வந்து மோதி, தலையில் நின்று தொந்தரவு செய்துள்ளன. மூடி இருக்கும் கதவை வந்து மோதி மோதி தொந்தரவு செய்துள்ளன. அதோடு காருக்குள் புகுந்து அப்படியே பயணமும் செய்து இருக்கிறது. இது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தொடரவே அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு, எங்களைப் பறவைகள் தொந்தரவு செய்கின்றன. என்ன பிரச்சனை என்று விசாரியுங்கள் என்று புகார் அளித்துள்ளனர். 

அந்த விசாரணையின் முடிவில், அந்தப் பறவைகள் எல்லாம் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆம் அந்தப் பறவைகள் போதையில்தான் இப்படி மக்களை தொந்தரவு செய்துள்ளன. அதுசரி அந்தப் பறவைகளுக்கு போதைப் பொருள் எவ்வாறு கிடைத்திருக்க முடியும் என்ற அதிர்ச்சி ஆய்வில், கிடைத்த தகவல்: அந்த பகுதியில் நிறைய பழங்கள் புளித்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புளித்த பழங்கள் இரண்டு நாளை வரை கூட பறவைகளுக்கு போதையை கொடுக்கும். அதன்பின் அது சரியாகிவிடும். இந்த மாதிரி சம்பவங்கள் ஏற்கனவே பல முறை உலகில் நடந்து இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு தெரியாது என்று பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,931.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.