Show all

அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன.

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன.

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன. சில நாடுகள் இந்தியத் தூதருக்கு அழைப்பாணை அனுப்பி அதிருப்தியை தெரிவித்துள்ளன.

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன. சில நாடுகள் இந்தியத் தூதருக்கு அழைப்பாணை அனுப்பி அதிருப்தியை தெரிவித்துள்ளன. இதில் ஓமன் மதகுரு வெளிப்படையாகவே இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த நுபுல் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் இருவரும் ஒரு காட்சிமடை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்பாட்டைத் தொடர்ந்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம், தோகாவில் உள்ள இந்தியத் துணைத்தூதரைஅழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் அவதூறு பேசுவது குறித்து கத்தார் அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதற்கு கத்தாரில் உள்ள இந்தியத்தூதர் தீபக் மிட்டல் கீச்சுவில் விடுத்த அறிக்கையில், கீச்சுவில் முஸ்லிம்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒன்றிய அரசின் கருத்துக்கள் அல்ல. இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது எனத் தெரிவித்தார்

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து, குவைத் அரசு, இந்தியத்தூதருக்கு அழைப்பாணை அனுப்பி தங்களின் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. 

ஓமனில் உள்ள உயர்மதகுரு ஓமன் ஷேக் அல் காலிலி விடுத்த செய்தியில், 'இறைத்தூதர் குறித்து அவதூறு பேசிய இந்தியர்களின் பொருட்களை புறக்கணியுங்கள்' எனத் தெரிவித்துள்ளார். சவுதிஅரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பெரும்பாலான கடைகளில் இந்தியப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தநிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முதல்முறையாக அடுத்த கிழமை இந்தியாவுக்கு வர இருக்கும் நிலையில் இந்தியத்தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. 

முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; குறித்து அவதூறு பேசிய பாஜக தலைவர்கள் செயல்கள் குறித்து இந்தியத் தூதரிடம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வேதனையையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,271.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.