Show all

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன், நிமிர்நிகழ்வில் ஆற்றிய கவிதையுரை

நிமிர் புத்தகப்பட்டறை, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நானூற்றுப் பத்தாவது சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு, நான் ஆற்றிய கவிதையுரையைக் கட்டுரையாக்கியுள்ளேன். கவிதையின் தலைப்பு: ஆழ்மனதின் சூறைக்காற்று என்பது. 

 

ஐம்பொழுது:
1.கிழமை: ஞாயிற்றுக்கிழமை
2.நாள்: 18
3.மாதம்: தை
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872607

மனம் ஆறாவது அறிவுக்கான புலன்!
ஆரியர் வரவுக்கு முந்தைய 
3500 ஆண்டுகளுக்கு முன்பு 
தமிழ்முன்னோர் தெளிவு படுத்தியிருந்த உண்மை.
மனம் ஆறாவது அறிவுக்கான புலன்!

மனம் நேரடியான அறிதலுக்கானது அல்ல.
மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற 
ஐம்புலன்கள் பெற்ற அறிவுகளை
பதித்துக் கொண்டு
அந்த ஐம்புலன்களை முயக்குவதற்கான 
ஒவ்வொரு தனிமனிதனின் கடவுளே மனம்.

கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே
கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லில் 
3500 ஆண்டுகளுக்கு முந்தைய 
தமிழ்முன்னோர் பொதித்த பொருளில்
இன்றுவரை உலகின் எந்த மொழியினமும்
எந்தச் சொல்லையும் கொண்டிருக்க வில்லை.

நீங்கள்! தமிழ்முன்னோர் நிறுவிய தமிழியலில் அமைந்தால்,
மனதில் இல்லை எந்தச் சிக்கலும்.
தேவையே இல்லை,
ஆழ்மனது சூறைக்காற்று போன்ற எந்தப் புலம்பலும். 

இதுவரை உங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும்
நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
உங்கள் மனதின் சூறைக்காற்று 
நீங்கள் கேட்டதால் கிடைத்ததே.
யாரும் திட்டமிட்டு தந்ததோ கிடைப்பதோ அல்ல

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணயராகப் பெறின்.
பிழை!
மனதில் தென்றலைக் கேட்காமல்,
சூறைக்காற்றைக் கேட்டுக் கொண்டு, 
புலம்பலில் மகிழும் கலைஆர்வந்தான்;
கவிதை ஆர்வந்தான்.

மக்கள்! மாண்புகளைக் கொண்டாடி, 
கடவுளிடம் இருந்து பேரளவான 
மகிழ்ச்சியை அறுவடை செய்ய, 
'மனதில்தென்றல்' என்பது போன்ற 
தலைப்புகளே தேவை.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணயராகப் பெறின்.
புயலை நமது எண்ணமாக்கிவிட்டு
தென்றலை எப்படி அறுவடை செய்ய முடியும்?

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.   

புலம்பல் தவமாக முடியாது.
தேவையைக் கேட்பதுதான் தவமாக முடியும்.
புரிந்து கொண்டு இயங்குவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.