Show all

புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்: அஷ்வினி சிவலிங்கம்

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ நாளை முன்னிட்டு, மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா அவையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ்  அறிவித்துள்ளார்.

     உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் வேசக் நாளுக்கு பாரம்பர்ய விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வேசக் நாளையொட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா அவை முடிவுசெய்துள்ளது.

     இலங்கையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில்,  100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 தலையாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியைப் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

     மோடியின் இரண்டாவது இலங்கைப் பயணம் இது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.