Show all

ராஜபக்சே-மகன் துணிச்சலான அறிக்கை! தமிழக அரசியல் தலைவர்களை நினைத்து வெட்கப்படுவோம். வேறென்ன செய்ய

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் துணிச்சலான ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான 70 அகவை கோத்தபயா ராஜபக்சே, வெற்றி பெற்றுள்ளார். இவர் நேற்று அதிபராக பதவியேற்றார். 

இந்தப் பெருமையில் திளைத்திருக்கும் முன்னாள் அதிபர் ராஜபக்சே மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்: தமிழக அரசியல் தலைவர்கள் சிலரைக் குறி வைத்து, ஓர் துணிச்சலான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  “சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அதில் சிலர் சுயநலத்துடன் சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுகின்றனர். அவர்கள், எம் மக்களுக்காக அரசியலை தவிர வேறென்ன ஆக்கபூர்வமான விசயத்தை செய்திருக்கிறார்கள்?

2009ல் யுத்தம் முடிந்ததும், திமுகவின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகினர். அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது.

புதிய அதிபரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சிறந்தது. உளப்பூர்வமாக நேசித்தால் ஈழத்தமிழர்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய பொறுப்புடன் செயல்படுங்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,341.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.