Show all

கல்வியின் இருட்டான-எதிர்காலம்! 1.கல்வியின் விலையேற்றம். 2.கல்விக்கான ஆதாயமான வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி வரும்நிலை

நீட்தேர்வால்- மருத்துக் கல்வி பெறுவதற்கான செலவு உயர்ந்து கொண்டே போகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால், பொறியியல் கல்விக்கான வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கல்வியின் எதிர்காலம்; கேள்விக்குறியாகி உள்ளது.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட்தேர்வால்- மருத்துக் கல்வி பெறுவதற்கான செலவு உயர்ந்து கொண்டே போகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக- தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால், பொறியியல் கல்விக்கான வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இப்படியாக இந்தியாவில் கல்வியின் எதிர்காலம்; கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் முதன்மை இடங்களில் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருட்டான கல்வியின் எதிர்காலம் குறித்து, ஒட்டு மொத்த பாதிப்புக்கான போராட்டமாக அல்லவென்றாலும், தங்கள் கல்வி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான போராட்டம் என்றாலும் கூட இதை விழிப்புணர்வாகக் கொண்டு மாணவர்கள் போராட்டம் இந்தியஅளவில் முன்னெடுக்க பட்டுவிடுமோ என்கிற அச்சம் கல்வியாளர்கள் நடுவே எழுந்துள்ளது.

டெல்லியில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தற்போது இந்திய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. மூன்று கிழமைகளுக்கு  முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய விதிகளை பிறப்பிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. இதில்தான் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. அதுவும் 300விழுக்காட்டு கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் விடுதியில் மாணவர்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இதற்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வந்தனர். முதலில் கல்லூரிக்கு உள்ளே போராட்டம் செய்தனர். அங்கு பட்டமளிப்பு விழா நடக்கும் போதும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் செய்தனர். 

நாங்கள் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். எங்களால் இவ்வளவு கட்டணம் கொடுக்க முடியாது. எங்களிடம் ஆலோசிக்காமல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். எங்களிடம் ஆலோசிக்காமல் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளனர் , இதை திரும்ப பெற வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகிறார்கள். 

ஆனால் கல்லூரி நிர்வாகமோ, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகமோ இதை ஏற்கவில்லை. கட்டண உயர்வில் பாதியை திருப்ப பெறுகிறோம். முழுதாக கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று கூறிவிட்டனர். இதற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் நேற்று பெரிதானது. நேற்று மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் நாடாளுமன்றம் செல்லும் பாதையில் பெரிய போராட்டம் மற்றும் கலவரம் நடந்தது. 

இன்று மீண்டும் மாணவர்கள் போராட்டம் செய்ய இருப்பதாகத் தெரியவருகிறது. டெல்லியில் உள்ள மற்ற பல்கலைக்கழக மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். டெல்லியின் முதன்மை நகரங்களில் இன்று போராட்டங்கள் நடக்க உள்ளது. இதனால் டெல்லியில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதன்மை இடங்களில் அதிக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மாணவர்கள் மொத்தமாக கூடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,341.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.