Show all

இஸ்ரேல் தலைமை அமைச்சர், நரேந்திர மோடிக்கு, கடல் நீர் சுத்திகரிப்பு வாகனம் பரிசளிக்க திட்டம்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இஸ்ரேலுக்கு நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, அங்குள்ள ஓல்கா கடற்கரையில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து நரேந்திர மோடி பார்வையிட்டார். கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்பில் பயணம் செய்தபடியே, அவர்கள் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்டனர்.

இந்த வாகனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நரேந்திர மோடி, அதுகுறித்து நெதன்யாகுவிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். சிறிய ரக ஜீப் போன்ற வடிவமைப்புடன் இருக்கும் இந்த வாகனமானது, நாளொன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல் நீரை மிகவும் தூய்மையான குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் திறன் படைத்தது. அதேபோல், நாளொன்றுக்கு 80 ஆயிரம் லிட்டர் அளவுகொண்ட மண் மாசுகளுடன் கூடிய நீரை இந்த வாகனத்தால் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

தமது இஸ்ரேல் சுற்றுப்பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பிய மோடி, இந்த சுத்திகரிப்பு வாகனத்தின் தொழில்நுட்பம் குறித்து தமது கீச்சு பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டிருந்தார். வௌ;ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், இந்த வாகனத்தின் தேவை குறித்தும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்த கிழமையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் தலைமை அமைச்சர் நெதன்யாகு, நரேந்திர மோடிக்கு அந்த வாகனத்தை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனம், இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டுடன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற இந்தியா சார்பில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு இஸ்ரேல் பயணத்தின் போது ஒப்பந்தம் செய்து விட்டு வந்தார் மோடி. இதன் மூலம் 1,600 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலின் முன்னணி ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனமான ரபேல் நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்தியா வாங்கும். அந்த ஒப்பந்தத்தை தற்போது இந்தியா திடீரென ரத்து செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,658

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.