Show all

இரா.கி.நகர்மக்களை, திருடனிடம் பிச்சையெடுத்த பிச்சைக்காரர்கள் என்று இழிவு படுத்திய கமல்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக, தோற்போம் என்று கருதுகிற கட்சிகள் எல்லாம் புகார்களைப் தேர்தலுக்கு முன்பே பதிவு செய்யத் தொடங்கி விட்டனர்.

பணப்பட்டுவாடா குறித்து கமல் தினகரன் வெற்றிக்குப் பிறகு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘ஆளும் கட்சி தரப்பில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 6,000 வரை தரப்பட்டது. முதல்வர் முதல் தமிழக அமைச்சர்கள் வரை அனைவரும் கச்சிதமாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அதேபோல் சுயமாக வளர்ந்த சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஒரு வாக்குக்கு ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்துள்ளார். எனவே அதிக விலை நிர்ணயித்த சுயேச்சை வேட்பாளருக்கே மக்கள் தங்கள் வாக்குகளை அளித்துவிட்டனர். ரூ.20 டோக்கனுக்கு இரா.கி.நகர் மக்கள் விலை போய்விட்டனர்.

ரூ.20 டோக்கனுக்கு மக்கள் விலை போயுள்ளது, பிச்சை எடுப்பதற்கு சமம், அதுவும் திருடனிடம் பிச்சை எடுக்கும் கேவலம் எங்காவது நடந்ததுண்டா

கமல் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறுகையில், செயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என கமல் நினைக்கிறார். கமல் நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர் என நினைத்தேன்; ஆனால் வாழ்க்கையில் நடிக்கிறார். கமல் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன். மக்களைக் கடுமையாக கேவலப் படுத்தி, தன்னை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தி, தானே தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டால் நாம் என்ன செய்ய முடியும் என்றார்: மக்கள் உளவியல் மேதையாக தினகரன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,658

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.