Show all

இந்திய மருத்துவ தம்பதியர் நோவா பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,300 கோடி நன்கொடை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் மருத்துவர் கிரண் பட்டேல்.

இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ நிபுணர். இவரது மனைவி பல்லவி பட்டேல், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்.

இவர்கள் தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் சார்பில், மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர்.

இதில் 50 மில்லியன் டாலரை தொகையாகவும், மீதி 150 மில்லியன் டாலரை 3¼ லட்சம் சதுர அடி நிலமாகவும் வழங்கி உள்ளனர். இந்த நன்கொடையை பயன்படுத்தி அந்த பல்கலைக்கழகம், ஒரு பிராந்திய வளாகத்தை தொடங்கும்.

அதன்மூலம் இந்தியாவில் இருந்து வருகிற மருத்துவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றதாகும் என டாக்டர் கிரண் பட்டேல் கூறினார்.

மேலும் புளோரிடா மாகாணத்தில் உலகத்தரம் வாய்ந்த நலவாழ்வை உருவாக்கவும் இவர்களது நன்கொடை பக்கபலமாக அமையும். இந்தப் பல்கலைக்கழகம், ஆண்டுக்கு 250 மருத்துவர்களை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பல்லவி பட்டேல் கூறும்போது, “நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடனான எங்களது கூட்டு ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையாக அமையும்என்று குறிப்பிட்டார்.

மோடிக்குத் தெரியாம பாத்துக்கோங்க! இந்திய மாணவர்களுக்கு நீட் வச்சு அனுப்பறேன்னு கிளம்பிடப் போறாரு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.