Show all

வன்முறையில், சீனாவின் நேர்கோட்டிற்கு வரும் இந்தியா- கொடுமை! இங்கு பாதிக்கப் படுபவர் சிறுமிகள், பெண்கள்

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செங்கற்களால் தாக்கியதில் கங்காரு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. 

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் யூஜியன் மாகாணத்தில் உள்ள பூலோவ் உயிரியல் பூங்காவில் ஏராளமான கங்காருகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பார்வையார்கள் கங்காருகளை துள்ளி குதித்து ஓட வைப்பதற்காக கற்களை தூக்கி எறிவது வாடிக்கையாக உள்ளது. உயிரியல் பூங்கா நிர்வாகித்தினர் முறையாக கண்காணிக்காததால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. கடந்த மாதம் பார்வையார்கள் கல்லால் அடித்ததில், 12 அகவையுள்ள பெண் கங்காரு ஒன்றுக்கு காலில் அடிபட்டது. பின் அது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில வாரங்களில், அதே உயிரியல் பூங்காவில் உள்ள 5 அகவையுள்ள ஆண் கங்காரு ஒன்றும் இதேபோல் தாக்கப்பட்டுள்ளது. அந்த கங்காருவுக்கு காலில் லேசாக அடிப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு இதுபற்றிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து, 

இதுபோன்ற தவறான நடவடிக்கைகளைத் தடுக்கவும்;, பார்வையார்களைக் கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு படக் கருவி பொருத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து, கற்களை அகற்றிய பின்பும் வேறு இடத்தில் இருந்து கற்களை கொண்டு வரும் சுற்றுலாப் பயணிகள் விலங்குகளை தாக்குவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கற்களை வீசிய சுற்றுலா பயணிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சீனாவில் உயிரியல் பூங்காக்கள் சரிவரக் கண்காணிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அண்மைக் காலமாக பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் இது போன்ற வன்முறை தொடங்கியிருக்கிறது. இங்கும் ஆட்சியாளர்களால், தங்கள் கட்சிக் காரர்களை சரிவரக் கண்காணிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,765.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.