Show all

ஏசியான் வணிக மன்றில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போற்றிக் கொண்டார் மோடி

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இதில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையே, ஏசியான் வணிக மன்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

நிதி பரிவர்த்தனைகளிலும் வரி விதிப்புகளிலும், எங்களது தனித்த அடையாள முறையைப் பயன்படுத்துகிறோம் இதன் முடிவுகள் ஏற்கனெவே தெரிந்ததுதான்

என அவர் கூறினார்.

மேலும், ‘இந்திய பொருளாதாரத்தின் பெரும்பகுதியை முறைப்படுத்த காகித பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியதுஎனவும் பேசினார். முதலீட்டுக்கு தேவையான வகையில் சட்டங்களை மாற்றியமைத்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

-பின்னே, காகித பணமதிப்பிழப்பில் எல்லா ரூபாய் தாளும் திரும்பி விட்டது என்றா தெரிவிப்பார்!

பலமாதங்கள் வரலாறு காணாத வகையில் இந்திய மக்கள் அவதிப் பட்டார்கள் என்றா தெரிவிப்பார்!

சில உயிரிழப்பு சம்பவங்கள் கூட நடந்து விட்டன என்றா தெரிவிப்பார்!

இந்திய மக்கள் எதிர்கட்சிகளோடு காகித பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாளை கறுப்பு நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றா தெரிவிப்பார்!

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,605

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.