Show all

மக்கள் போராட்டம் வென்றது- சட்டமுன்வரைவைத் திரும்பப் பெற்றது அரசு! ஹாங்காங்கில்

ஹாங்காங்கில் மக்கள் முன்னெடுத்த, ‘குற்றசாட்டின் மீது நாடு கடத்தி விசாரணை மேற்கொள்ளும் சட்ட முன்வரைவை’ திரும்ப பெற வலியுறுத்திய மக்கள் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தது.

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குற்றசாட்டின் மீது நாடு கடத்தி விசாரணை மேற்கொள்ளும் சட்ட முன்வரைவைத் திரும்பப் பெறுவதாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கின் பெண் தலைமை செயல் அதிகாரி கேரி லேம் அறிவித்துள்ளார்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், குற்றஞ்சாட்டப் பட்டவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி சிறையில் அடைப்பதற்கான சட்டமுன்வரைவு மூன்று  மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இதற்கு, ஹாங்காங்கில் எதிர்க்கட்சிகள் உட்பட, பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தங்களைக் கட்டுப்படுத்த, சீனாவின் தூண்டுதலால், இந்த சட்டமுன்வரைவு கொண்டு வரப்பட்டதாக, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த, மூன்று மாதங்களாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டமுன்வரைவைத் திரும்பப் பெறுவதாக, ஹாங்காங்கின், பெண் தலைமை செயலர் அதிகாரியான, கேரி லேம் நேற்று அறிவித்தார். ஆனால், இதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. தங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என, அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

‘போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, போராட்டங்கள் தொடரும்’ என, அவர்கள் அறிவித்துள்ளனர்.

தீர்வு கொடுத்து விட்டோம் என்று, சென்னைக்கடற்கரையில் சல்லிக்கட்டுக்காக போராடிய மக்களை, இந்திய பாஜக அரசு நெருக்குதலில், அடித்து விரட்டிய பன்னீர் அரசு பாணியை, முன்னெடுத்து விட வேண்டாம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கின் பெண் தலைமை செயல் அதிகாரி கேரி லேம் அவர்கள்; மென்மையாக கையாளவும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,266.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.