Show all

மீண்டும் வெடித்த ஹவாய் எரிமலை! மொத்த தீவையும் சுற்றிவளைத்த நெருப்புக் குழம்பு

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மூன்றாவது முறையாக வெடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டாக மாறி மாறி வெடித்துக் கொண்டு இருந்த எரிமலை தற்போது மீண்டும் நெருப்புக் குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது. இது மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். இதற்காக அமெரிக்க அரசு மீட்பு படையை அனுப்பி இருந்தது. ஆனாலும் இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் மீட்கப்பட முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வரும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் வெளியேறும் வழியிலும் எரிமலை சூழ்ந்து இருக்கிறது. இங்கு எப்போது எரிமலை வெடித்தாலும் மக்கள் வெளியேற பயன்படுத்தும் வழிகளில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. ஆனால் முதல்முறையாக, அந்தப் பாதையையும் தற்போது எரிமலை குழம்புகள் சூழ்ந்து இருக்கிறது. இதனால் மக்கள் நடந்து இந்த பகுதியை விட்டே வெளியே செல்ல முடியாது என்று கூறப்படுகிறது. மீட்பு வாகனமும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே மெதுவாக நடந்த மீட்பு பணி இன்னும் தாமதமாகி உள்ளது. மீட்பு வாகனம் எதுவும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. 2500 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பலர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மீட்புபணி செய்ய முடியாததால், இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிட முடியவில்லை. 

43ஆண்டுகளாக இந்தத் தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. கிலாயூ என்ற எரிமலைதான் அதிக வீரியத்துடன் காணப்பட்டது. தற்போது இந்த எரிமலைதான் வெடித்துள்ளது. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கின்றன. அந்த வகையில் கிலாயூ எரிமலை ஒரு கிழமை முன்பு வெடித்தது. மிகவும் மோசமான நிலையில் நெருப்பு குழம்புகளை கக்கிக் கொண்டு இருக்கிறது. 

தற்போதும் இந்த எரிமலை தொடர்ந்து வெடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த எரிமலையில் இருந்து வரும் குழம்புகள் மொத்தம் 1,093 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாக அமெரிக்க கூறியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஒரு கிழமையாக குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் நடுவில் அங்கே நிலநடுக்கம் வேறு ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிமலையோடு வாழ்க்கை நடத்தும் அந்த  மக்களுக்கு பாதுகாப்பு தரும் அந்த அரசு எங்கே! வளமான நிலத்தையும் மீத்தேன் நியுட்ரினோ என்று பாலைவனமாக்க முயலும் நம்முடைய அரசு எங்கே? 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,793.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.