Show all

இலங்கையில் பிரம்மாண்டப் பேரணி! விக்ரமசிங்கே பதவி நீக்கத்தை எதிர்த்து

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்து விட்டு அடாவடியாக, சட்ட விரோதமாக, புதிய பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்தி, ஏற்படுத்தியுள்ள அரசியல் குழப்பத்தை, அசிங்கம் பிடித்த சீனாவையும், அருவருப்பு மனிதர் சுப்பிரமணிய சாமியைத் தவிர இலங்கையோடு நட்பில் உள்ள நாடுகள் கருத்து சொல்லவே வெட்கப் படுகின்றன.
  
பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற பேரடவைத்; தலைவர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட பேரவைத்தலைவர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை இருபது நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தலைமை அமைச்சர் யார்? என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன. 

இது தொடர்பாக அவைத்தலைவர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் நாள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சே, பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடத்தி வருகிறார்.

இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 பாராளுமன்ற உறுப்பினர் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு பெரும்பான்மையை பெற இன்னமும் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு இவரை ஆதரிக்க அணியமாக உள்ளது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்புவில் இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டவாறு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பு நகரின் முதன்மைச் சாலையில் பேரணியாக சென்றனர். 

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.