Show all

ஊதிய உயர்வை மறுத்த அரசு மருத்துவர்கள்! உலகத்தமிழர் மனங்கவர்ந்த கனடிய நாட்டில்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கியூபெக் நகரத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவர்களுக்குச் சமீபத்தில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், அவர்களது மருத்துவச் சங்கத்தில் மனு அளித்துள்ளனர். அதனால், மருத்துவச் சங்கத்தின் தரப்பில் இருந்து மனு குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. 

அதற்கு, மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களும் மற்றும் அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். மேலும், செவிலியர்களின் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது.

அதனால் அவர்கள் பணிச்சுமை கரணமாக, மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எங்களது சக ஊழியர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும்போது, நாங்கள் எவ்வாறு இந்த ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ள முடியும். அதனால் எங்களுக்கு இந்த ஊதிய உயர்வு தேவையில்லை என நிராகரித்துள்ளனர். 

மேலும், தேவைக்கு அதிகமான வருமானத்தைப் பெறுவதால், இந்த ஊதிய உயர்வுப் பணத்தை நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அரசு மருத்துவர்கள், அவர்களின் சங்கத்திடம் மனு அளித்துள்ளனர்.

வாழ்த்துக்கள்! உலகத்தமிழர்களுக்கு பிடித்த கனடிய அரசோடு, இப்போது உங்களையும. பிடித்து விட்டது கனடிய மருத்துவர்களே. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,722. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.