Show all

தற்போது தங்கம் வாங்குவது குறைந்து விட்டதா! முதன் முதலாக தங்கத்தை செலாவணியாக்கியவர்கள் நம்பழந்தமிழ் முன்னோர்கள்.

முத்து, மயில்தோகை, ஏலம் கிராம்பு போன்ற நறுமணப் பொருள்கள், ஆகியவற்றை கப்பலில் ஏற்றி, உலகம் முழுவதும் சென்று வணிகம் புரிந்த நம்பழந்தமிழ் முன்னோர் செலாவணியாக தங்கத்தைக் கேட்டுப்பெற்றார்கள். விதிவிலக்காக அரபு நாடுகளில் மட்டும் குதிரையைச் செலாவணியாகப் பெற்றார்கள்.

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: முத்து, மயில்தோகை, ஏலம் கிராம்பு போன்ற நறுமணப் பொருள்கள், ஆகியவற்றை கப்பலில் ஏற்றி, உலகம் முழுவதும் சென்று, வணிகம் புரிந்த நம்பழந்தமிழ் முன்னோர் செலாவணியாக தங்கத்தைக் கேட்டுப்பெற்றார்கள். 

எகிப்து அரசி கிளியோபட்ரா, தமிழக முத்தை ஊறவைத்த பாலில் குளிப்பார்களாம். இதனால் எகிப்து அறிஞன் தாலமி இந்த (நாவல)இந்தேய(ம்) மக்களால் எகிப்தின் செல்வவளம் கொள்ளை போகிறது என்று சாடியதாக வரலாறு சொல்கிறது. 

நமது தமிழகத்தில் எங்கும் விளையாத தங்கத்தின் மீது தமிழர்களுக்கு நீண்ட நெடுங்காலமாகவே மிகுந்த விருப்பம் உண்டு. ஆனாலும் அண்மைக் காலமாக, தங்கத்தின் விலை எகிறிக் கொண்டே செல்கிற நிலையில் தமிழகத்தில் தங்கம் வாங்குவது குறைந்துள்ளதாக பட்டியல் இடுகிறார்கள்.

இந்த நிலையில்- தற்போது தங்கம் விலை ரூ.2,400 குறைஞ்சிருக்கே. இப்போது வாங்கலாமோ என்று தங்க வணிகர்கள் ஆசையைத் தூண்டி வருகின்றனர். ஆனால் இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால்-

அமெரிக்கா சீனா ஒப்பந்தம் விரைவில் போடப்படலாம் என்ற கணிப்பு தான். கடந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, மூன்று மாதங்களுக்கு முன்பு 40,000 மேல் உச்சத்தை தொட்டது. 

இந்த நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் கொஞ்சம் சரிய தொடங்கியது. இந்த நிலையில் உச்சத்திலிருந்து தங்கத்தின் விலையானது 2,400 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. பங்கு சந்தைகளில் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தாலும், ஆபரண தங்கத்தின் விலையானது அந்தளவுக்கு குறையவில்லை. 

இந்திய பொருள்பங்குச்சந்தை வணிகத்தில் தற்போது 37641 ரூபாயாக வணிகமாகி வருகிறது தங்கம். அமெரிக்கா - சீனா வணிக ஒப்பந்ததிற்கான முதல் கட்ட நிலையை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவும் சீனாவும் நெருக்கமாக இருப்பதாக டெனால்டு டிரம்ப் கடந்த செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளும் அடுத்தடுத்த கலந்துரையாடல்களும் பேசி மூலமாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அமெரிக்கா- சீனா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக உலகளாவிய பங்கு சந்தைகள் சற்று வலுவடைந்துள்ளன. இதன் விளைவாக தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம் குறித்தான செய்திகள் தங்கத்தின் குறுகிய கால வேகத்தை அதிகரிக்கலாம். ஆனால் ஒப்பந்தம் குறித்தான எந்தவொரு குறிப்பும் பொருளாதார மந்த நிலையின் அச்சத்தை எளிதாக்கும். இது சந்தைகளின் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். பொருளாதாரம் குறித்த நேர்மறையான பார்வை தங்கத்தின் விலையை குறைக்கும். 

மேலும் உயர்மட்ட நுகர்வோரிடமிருந்து தங்கத்திற்கான தேவை மோசமடைவதும் பின்னர் விலை இறக்க இன்னும் வழிவகுக்கும். இதே இந்திய ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரை, பெரிய அளவில் இறக்கம் இல்லாவிட்டாலும் சற்று விலை குறைய வாய்ப்புள்ளது. தமிழர்கள் சேமிப்புக்குத் தங்கம் வாங்க இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்கலாம் என்று அறிய முடிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,350.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.