Show all

தரவரிசையில் இந்தியா முதலிடம்! மோசமான கடன்கள் (திவால்கடன்கள், வாராக்கடன்கள்) கொண்ட நாடுகள் பட்டியலில்

உலகின் முதன்மையான 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்பதாக- உலகின் முதன்மையான 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை திரட்டி, வெளியிட்டு இருக்கிறது ப்ளூம்பெர்க் நிறுவனம்.

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் முதன்மையான 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்பதாக- உலகின் முதன்மையான 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை திரட்டி, வெளியிட்டு இருக்கிறது ப்ளூம்பெர்க் நிறுவனம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மோசமான கடன்கள் அளவு 5.1 விழுக்காடாக இருந்தது. இது மூன்றாண்டுகளுக்கு முன்பு 09.1 விழுக்காடாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10.2 விழுக்காடாகவும் கடந்த ஆண்டில் 10.8 விழுக்காடாகவும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு இருக்கிறது. 

இதற்கு நேர் மாறாக இத்தாலியின் மோசமான கடன்கள் அளவு கணிசமாக குறைந்து நடப்பு ஆண்டில் இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிட்டது. எதற்காக இந்தியாவோடு இத்தாலி ஒப்பிடப்படுகிறது எனில்-

நடப்பு அண்டில் உலகின் முதன்மையான 10 பொருளாதார நாடுகளில் இந்தியா மற்றும் இத்தாலி நாடுகள், தங்களின் மொத்த கடனில் 5 விழுக்காட்டுக்கு அதிகமாக மோசமான கடன்களாக இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருக்கும் பிரேசில் கூட தன் மொத்த கடன் தொகையில் 3.1 விழுக்காட்டு மட்டுமே மோசமான கடன்களாக கொண்டு இருக்கிறது. இந்திய வங்கிகளுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் எவ்வளவு பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பதை இந்தத் தகவல் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

ஏன் இந்தியாவில் மட்டும் மோசமான கடன்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்கிற கேள்வியைக் கேட்கத் தொடங்கினால்- ப்ளூம்பர்க் அதற்கும் விடைகளைக் கொடுத்து இருக்கிறார்கள்.
என்பிஎப்சி என்றழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நிலவும் சிக்கல்கள். அடுத்து
திவால் சட்ட நடவடிக்கைகளில் தேவையான அளவிற்கு வேகமின்மை என்று இருபெரும் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு இருக்கிறது ப்ளூம்பெர்க்.

இந்த என்பிஎப்சி நிறுவனங்கள், பொதுவாக ஒரு வங்கியிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவார்கள். குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிய பணத்தையே, மற்றவர்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பார்கள். எடுத்துக்காட்டாக 09 விழுக்காட்டு வட்டிக்கு கடன் வாங்கி 15 விழுக்காட்டு வட்டிக்கு கடன் கொடுத்தால் 06 விழுக்காடு லாபம். இது தான் என் என்பிஎப்சி நிறுவனங்களின் வணிகம்.

இப்போது என்பிஎப்சி நிறுவனங்கள் யாருக்கு எல்லாம் கடன் கொடுத்ததோ, அவர்களிடம் இருந்து கடனை திருப்பி வசூலிக்க முடியவில்லை. கொடுத்த கடன்களை திருப்பி வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். என்பிஎப்சி நிறுவனங்கள் கடன் கொடுத்த சில பெரிய நிறுவனங்களே திவால் ஆகிவிட்டன. 
1. என்பிஎப்சி நிறுவனங்களால் புதிதாக மேற்கொண்டு கடன் கொடுக்க பணம் இல்லை. நிதி நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கிறது.
2. என்பிஎப்சி நிறுவனங்களாலும், வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இப்படியே மோசமான கடன்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
3. இந்தியப் பொருளாதாரம் கடந்த 6 ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது.
இந்தியாவின் திவால் சட்டத்தின் படி, ஒருவர் வாங்கிய கடனை ஒழுங்காகச் செலுத்தவில்லை என உறுதி செய்துவிட்டால், அடுத்த 270 நாட்களுக்குள் திவால் சட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்தி, அவர்களிடம் இருந்து கடனை வசூலித்து இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படி நடக்கவில்லை.

கடந்த ஐந்து காலாண்டுகளில் திவால் சட்டத்தின் கீழ் கடன்களை வசூலிக்க வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றன. 9.3 விழுக்காடு மோசமான கடன்களாக இருந்தால் எப்படி இந்தியப் பொருளாதாரம் வளரும்?

இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வாரா கடன்களை குறைத்து, இந்திய நிதி நிறுவனங்களை மேற் கொண்டு கடன் கொடுக்க வைக்க வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடன் கொடுப்பது தடை பட்டால் புதிய தொழில் வணிகங்கள் இல்லாமல் போகும். மொத்த பொருளாதாரமே நிலைநின்று விடும். 
இந்தியாவில் கடன் கொடுப்பது நின்றுவிட்டால்:
1. புதிய திட்டங்கள் மற்றும் வியாபார விரிவாக்கங்கள் வராது,
2. மேலே சொன்னது நடக்கவில்லை என்றால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்காது.
3. வேலை வாய்ப்பு இல்லை என்றால் தேவை சரியும்
4. தேவை சரிந்தால், நுகர்வு சரியும்
5. நுகர்வு சரிந்தால் உற்பத்தி சரியும்.
6. உற்பத்தி சரிந்தால் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், தன் ஊழியர்களின் வேலையை பறிப்பார்கள்.
7. மீண்டும் தேவை சரியும், நுகர்வு சரியும் இப்படியே மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காணும்.

இந்திய அரசு மற்றும் மைய கட்டுப்பாட்டு வங்கியும் இந்த வாரா கடன் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். எடுத்துக் கொள்வார்கள் என நம்புவோம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,370.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.